திடீரென டிரெண்டான #JusticeforVigneshShivan ஹாஷ்டேக்.. தெறிக்கும் மீம்கள்.. என்ன ஆச்சு?
சென்னை: நடிகர் அஜித்தின் ஏகே62 படத்தில் இருந்து இயக்குநர் விக்னேஷ் சிவனை வெளியேற்றியதாக தகவல்கள் வெளியான நிலையில், #JusticeforVigneshShivan ஹாஷ்டேக்கை விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் ஏகப்பட்ட ட்ரோல் மீம்களை பதிவிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தொடர்ந்து 4 படங்களில் நடித்த நடிகர் அஜித் அடுத்ததாக இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என 3 படங்களில் நடித்தார்.
அடுத்ததாக இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீர் ட்விஸ்ட்டாக விக்னேஷ் சிவன் மாற்றப்பட உள்ளார் என்கிற தகவல் தீயாக பரவி வருகிறது.

அன்பான இயக்குநர்
சிம்புவின் போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன், விஜய்சேதுபதியை வைத்து நானும் ரவுடி தான் படத்தை இயக்கி ஹிட் அடித்தார். சூர்யாவை வைத்து அவர் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் படம் சரியாக போகவில்லை. அதன் பின் கடந்த ஆண்டு மீண்டும் விஜய்சேதுபதி உடன் அவர் இணைந்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஹிட் அடித்தது. அன்பான இயக்குநர் என ரசிகர்கள் மத்தியில் பெயர் வாங்கிய விக்னேஷ் சிவன் அடுத்து ஏகே62 படத்தை இயக்கப் போகிறார் என லைகா நிறுவனம் அறிவித்து இருந்தது.

திடீர் ட்விஸ்ட்
இந்நிலையில், ஏகே62 படத்தில் இருந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் அதிரடியாக மாற்றப்படுவதாக சில சினிமா டிராக்கர்கள் போட்ட ட்வீட் சோஷியல் மீடியாவில் தீயாக பற்றி எரிந்து வருகிறது. ஏகே62 ஹாஷ்டேக் காலையில் இருந்து டிரெண்டாகி வந்த நிலையில், தற்போது #JusticeforVigneshShivan ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

விக்னேஷ் சிவனுக்கு நீதி வேண்டும்
ஏகே 62 படத்தில் இருந்து இயக்குநர் விக்னேஷ் சிவனை அதிரடியாக நீக்கக் கூடாது என்றும் அவருக்கு நீதி வேண்டும் என #JusticeforVigneshShivan ஹாஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து அதில் ஏகப்பட்ட வீடியோ மீம்களையும், போட்டோ மீம்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தா மங்காத்தா
மங்காத்தா டைப் அஜித் படம் வேணும்னு ஆசைப்பட்டீங்களே, நிஜமாகவே அஜித் மங்காத்தாவை காட்டிட்டாருன்னு விக்னேஷ் சிவனை காரில் இருந்து அஜித் தள்ளி விடுவது போல மங்காத்தா படக் காட்சியை எடிட் செய்து வீடியோக்களையும், போட்டோக்களையும் வெளியிட்டு விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர்.

தெறிக்கும் மீம்கள்
வழக்கமா ரிலீஸ் தேதியை தானே போஸ்ட்போன் பண்ணுவீங்க இப்போ ஏன் டைரக்டரையே போஸ்ட்போன் பண்றீங்க என்றும் அது விஜய்க்கூட கிளாஷுக்கு முன்னாடின்னு வித விதமாக கலாய்த்து நெட்டிசன்கள் ஏகப்பட்ட மீம்களை சும்மா தெறிக்க விட்டு வருகின்றனர்.

மகிழ் திருமேனி
வாரிசு படத்துடன் வெளியான துணிவு படம் வசூலில் வெல்ல முடியாத நிலையில், அடுத்ததாக தளபதி 67 படத்துடன் வெயிட்டான கிளாஷ் விட இயக்குநர் விக்னேஷ் சிவனை மாற்றி விட்டு இயக்குநர் மகிழ் திருமேனி தளபதி விஜய்க்கு சொன்ன கதையில் நடிக்கப் போவதாக விஜய் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

அப்போ புரியலை இப்போ புரியுது
நான் தான் அஜித்தோட ஏகே 62 படம் பண்றேன் என இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குநர்கள் ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில் சொல்லும் போது, பரத்வாஜ் ரங்கநாதன் எந்த உள்குத்துடன் அப்படியான்னு சொன்னாருன்னு இப்போ தான் புரியுது என ரசிகர்கள் அந்த வீடியோவையும் ஷேர் செய்து வருகின்றனர்.
பதிலடி தருவாரா விக்னேஷ் சிவன்
அஜித்தின் ஏகே62 படத்தின் அப்டேட்டை பெறுவதற்காக நெட்டிசன்கள் இப்படி கிளப்பி விட்டுள்ளனரா என்று தெரியவில்லை. இதற்கெல்லாம் விரைவில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிலடி தருவாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. விக்னேஷ் சிவன் அந்த ஷோவில் பேசும் போது கூட அஜித் தனக்கு நிறைய சுதந்திரம் கொடுத்துள்ளார் என்று உயர்வாகவே பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











