»   »  புதுக்கவிதை ஜோதி மரணம்!

புதுக்கவிதை ஜோதி மரணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்துக்கு ஜோடியாக புதுக்கவிதை படத்தில் நடித்த நடிகை ஜோதி சென்னையில் இன்று மரணமடைந்தார்.

டி.ராஜேந்தர் தயாரித்து, இயக்கி, நடித்த ரயில் பயணங்களில் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் ஜோதி. பின்னர் கே.பாலச்சந்தர் தயாரித்த புதுக்கவிதை படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

அதன் பிறகு சில படங்களில் ஹீரோயினாக நடித்த ஜோதி பின்னர் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். அவருக்கு ஹசீதா என்ற ஒரே ஒரு மகள் உள்ளார்.

கல்யாண வாழ்க்கையில் கசப்பு ஏற்படவே கணவரை விவாகரத்து செய்தார். மகளுடன் நீலாங்கரை ராஜா நகரில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு மார்பகப் புற்று நோய் ஏற்பட்டது. கடந்த நான்கு வருடங்களாக இதற்காக சிகிச்சை எடுத்து வந்தார்.

இந்த நிலையில் நோய் முற்றியதைத் தொடர்ந்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மரணமடைந்தார்.

ஜோதிக்கு வயது 44. அவரது உடல் நீலாங்கரை வீட்டில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று இரவு பெசன்ட் நகர் சுடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil