»   »  சிம்பு படத்தில் நடிக்கவிருந்தாரே ஜோதிலட்சுமி: இயக்குனர் ஆதிக் இரங்கல்

சிம்பு படத்தில் நடிக்கவிருந்தாரே ஜோதிலட்சுமி: இயக்குனர் ஆதிக் இரங்கல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த நடிகை ஜோதிலட்சுமி சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடிக்கவிருந்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் நடிகை ஜோதி லட்சுமி ரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடித்து வந்தார். இந்நிலையில் அவர் இன்று மரணம் அடைந்தார்.

இது குறித்து அறிந்த திரையுலக பிரபலங்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஜோதிலட்சுமி குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது,

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்திலும் நடித்த ஜோதிலட்சுமி இறந்துவிட்டார். அவர் ஏஏஏ படத்தில் பெரிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார். உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும் மேடம் என தெரிவித்துள்ளார் ஆதிக்.

English summary
AAA director Adhik Ravichandran tweeted that, '#Jothilakshmi actress who also acted in #TIN passed away.also had a big character in #AAA .very sad. RIP mam'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil