»   »  ஜோதிகாவுக்கு பெண் குழந்தை!

ஜோதிகாவுக்கு பெண் குழந்தை!

Subscribe to Oneindia Tamil

நடிகை ஜோதிகாவுக்கு நேற்று இரவு பெண் குழந்தை பிறந்தது.

சூர்யாவும், ஜோதிகாவும் நீண்ட காலம் காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி சென்னையில் நடந்த கோலாகலக் கல்யாணத்தில் தம்பதிகளாகினர்.


இந் நிலையில் நேற்று மாலை அவர் பிரசவத்திற்காக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரவு 9.22 மணிக்கு சிசேரியன் மூலம் பிரசவமானது.

அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் ஜோதிகா. தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

குழந்தை பிறந்தபோது சூர்யா அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் இருந்தனர்.

மகிழ்ச்சியில் சிவக்குமார் குடும்பம்:

இந் நிலையில் சிவக்குமார் குடும்பம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல பாகங்களிலும் வாழும் மக்கள் தங்களது பிள்ளை போல நினைத்த சூர்யா, ஜோதிகா திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று என்று கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகளில் பூஜைகள் நடத்தி பலர் வேண்டிக் கொண்டனர்.

மானசீகமாக இந்த இளஞ்ஜோடியை வாழ்த்திய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இந்த மகிழ்வான செய்தியை தெரிவிப்பதில் பெருமிதம் அடைகிறோம்.

இந்தப் பெண் குழந்தை எல்லாச் சிறப்பும் பெற்று வீடும், நாடும், போற்றிடும் வகையில் பல்லாண்டு பெருமைக்குரிய வாழ்வு வாழ வாழ்த்திட வேண்டும் என்று அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil