»   »  ஜோதிகா - பாலா இணையும் படத்தின் பெயர் 'நாச்சியார்’?

ஜோதிகா - பாலா இணையும் படத்தின் பெயர் 'நாச்சியார்’?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரீ எண்ட்ரி ஆகி ஹீரோயினுக்கான படங்களில் மட்டும் நடித்துவரும் ஜோதிகா, விஜய் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பதாக இருந்தது. பாலாவோ புதுமுகங்களை வைத்து ஒரு காதல் காமெடி படம் எடுக்கத் திட்டமிட்டிருந்தார்.

யாரும் எதிர்பாராத விதமாக பாலா படத்தில் ஜோதிகா நடிக்கிறார் என்று செய்தி வந்தது.

Jyothika - Bala movie title Naachiyar?

அதோடு ஆச்சர்யமாக ஜிவி.பிரகாஷும் இந்த படத்தில் நடிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

அக்காவையும் அக்கா குடும்பத்தினரையும் கொன்ற ஒரு கொலைகாரனின் கதை, வடசென்னையை மையமாகக் கொண்ட கதை, ஜோதிகா போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. படத்தின் தலைப்பு இதுவரை வரவில்லை.

நாம் விசாரித்த வகையில் இந்தப் படத்துக்கு நாச்சியார் என்று பெயரிட்டிருக்கிறாராம் பாலா.

கதை நிகழிடம், தலைப்பு என்னவாக இருந்தாலும், ஓர் உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட கதைதான் இது என்கிறார்கள்.

English summary
Sources say that the title of Bala - Jyothika is Naachiyar

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil