twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அழகான ராட்சசி ஜோதிகாவின் பர்த்டே ஸ்பெஷல்...சில சுவாரஸ்யத் தகவல்

    |

    சென்னை : தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் நடிகை ஜோதிகா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் ட்விட்டரில் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

    மும்பையை பூர்வீகமாக கொண்டவர் ஜோதிகா 1977ம் ஆண்டு பிறந்தார் ஜோதிகாவின் அப்பா சந்தர் சதானாஹ், திரைப்பட தயாரிப்பாளராவார்.

    இன்று 44 பிறந்த நாளை கொண்டாடிவரும் ஜோதிகா பற்றி சில சுவாரசியத் தகவல்களை பார்க்கலாமா?

    தேசிய விருது விழாவில் முதன்முறை..ஜோடியாக விருது வாங்கிய சூர்யா-ஜோதிகா..விழாவில் சிறப்பான சம்பவம் தேசிய விருது விழாவில் முதன்முறை..ஜோடியாக விருது வாங்கிய சூர்யா-ஜோதிகா..விழாவில் சிறப்பான சம்பவம்

    நடிகை ஜோதிகா

    நடிகை ஜோதிகா

    அழகு, திறமை, ஆளுமைப் பண்புகள் என அனைத்தும் நடிகை ஜோதிகாவிடம் கொட்டிக்கிடக்கும் ஜோதிகாவின் இயற்பெயர் ஜ்யோதிகா ஸதானாஹ். மும்பையில் பிறந்த வளர்ந்ததால், ஜோதிகாவுக்கு தமிழ் தெரியாது என்பதால் தமிழில் அறிமுகமான போது, தமிழ் தெரியாமல் சிரமப்பட்டுள்ளார். இருப்பினும், தமிழ் மொழியைக் கற்க வேண்டும் என அவருக்கு இருந்த ஆர்வத்தால் 'பூவெல்லாம் கேட்டுப்பார் 'படத்தின் ஷூட்டிங்கின் போது, சூர்யாவிடம் தமிழ் கற்றுக்கொண்டார்.

    வாலி படத்தில் அறிமுகம்

    வாலி படத்தில் அறிமுகம்

    ப்ரியதர்ஷன் இயக்கிய 1998ம் ஆண்டு வெளியான டோலி சஜா கே ரக்னா என்ற இந்தி திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். தமிழில் முதல்முறையாக 1999-ல் அஜித்-சிம்ரன் நடிப்பில் வெளியான 'வாலி' படத்தில் கெளரவத் தோற்றத்தில் நடித்திருந்தாலும் கதையில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும் கதாபாத்திரமாக அது அமைந்திருந்தது.

    காதல் திருமணம்

    காதல் திருமணம்

    பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இணைந்து நடித்த போது காதலிக்கத் தொடங்கிய இவர்கள் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர் மற்றும் சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் நடித்துள்ளனர். இதை அடுத்து இவர்களுக்கு இரு வீட்டார் சம்மதத்துடன் 2006 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

    பல விருது

    பல விருது

    ஜோதிகா தயாரிப்பு நிறுவனமான 2d மூலம் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளனர். அதன்படி சூரரைப் போற்று படத்திற்காக தேசிய விருதை சமீபத்தில் பெற்றார். அதே போல கலைமாமணி விருது, வாலி படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது, பேரழகன் படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் என விருதுகளை வென்றுள்ளார்.

    English summary
    Jyothika Birthday special, Her first Tamil movie as a lead artist was Poovellam Kettuppar with Surya Sivakumar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X