»   »  ஜோதிகாவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது: டோணிக்கு சூர்யா நன்றி

ஜோதிகாவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது: டோணிக்கு சூர்யா நன்றி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கிரிக்கெட் வீரர் டோணியை காண வேண்டும் என்ற நடிகை ஜோதிகாவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளது.

கிரிக்கெட் வீரர் டோணி தனது வாழ்க்கை வரலாற்றுப் படமான எம்.எஸ்.டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரியை விளம்பரப்படுத்த சென்னை வந்தார். சென்னை சத்யம் சினிமாஸில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.

Jyothika's wish fulfilled: Suriya thanks Dhoni

நடிகை ஜோதிகா தனது மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் வந்திருந்தார். தேவ் மற்றும் தியா டோணிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர். மேலும் டோணியிடம் தாங்கள் கேட்க விரும்பிய கேள்விகளை கேட்டனர்.

இந்நிலையில் டோணியை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஜோதிகாவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளது. ஜோதிகா டோணியின் தீவிர ரசிகையாம். இது குறித்து சூர்யா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

என் குழந்தைகளுக்கு என்ன ஒரு கிளாசிக் தருணம்! அன்புக்கு நன்றி டோணி. அடுத்த முறை எங்கள் வீட்டில் டின்னர்..! நன்றி டிடி என தெரிவித்துள்ளார்.

English summary
Jyothika's wish to see MS Dhoni in person has been fulfilled when cool captain came to Chennai to promote his upcoming biopic.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos