»   »  சூர்யா கேட்ட ஒரு கேள்வி: 2 நாட்கள் கழித்து பதில் அளித்த ஜோதிகா

சூர்யா கேட்ட ஒரு கேள்வி: 2 நாட்கள் கழித்து பதில் அளித்த ஜோதிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தை ரீமேக் செய்தால் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமா என்று சூர்யா கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க ஜோதிகா இரண்டு நாட்கள் எடுத்துள்ளார்.

சூர்யாவை காதல் திருமணம் செய்து 2 குழந்தைகளுக்கு தாயான ஜோதிகா சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். விளம்பரப் படங்களில் மட்டும் அவ்வப்போது நடித்து வந்தார். இந்நிலையில் தான் 8 ஆண்டுகள் கழித்து ஜோதிகா மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

இல்லை, இல்லை நடிக்க அழைத்து வரப்பட்டுள்ளார்.

ஜோதிகா

ஜோதிகா

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள 36 வயதினிலே படம் மூலம் தான் ஜோதிகா மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

மீண்டும் எப்படி?

மீண்டும் எப்படி?

ஜோதிகாவுக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தபோதிலும் அதை அடக்கி வைத்திருந்தார். இந்நிலையில் தான் ஒரு நாள் அவர் சூர்யாவுடன் சேர்ந்து மஞ்சு வாரியர் நடித்த ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தை பார்த்து அசந்து போனார்.

சூர்யா

சூர்யா

ஹவ் ஓல்டு ஆர் யூ படம் தான் ஜோதிகா மீண்டும் திரைத்துறையில் நுழைய சரியான படம் என நினைத்தார் சூர்யா.

கேள்வி

கேள்வி

ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தை தமிழில் ரீமேக் செய்தால் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமா என சூர்யா ஜோதிகாவிடம் கேட்டுள்ளார்.

2 நாட்கள்

2 நாட்கள்

சூர்யா கேட்ட கேள்விக்கு 2 நாட்கள் நன்கு யோசித்து அதன் பிறகு சரி, மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என பதில் அளித்துள்ளார் ஜோதிகா.

English summary
Jyothika took two days to answer a question asked by Suriya about her comeback.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil