71 வயது நடிகருக்கு ஜோடியாகும் ஜோதிகா... சூர்யா எப்படி ஓகே சொன்னார்?

சென்னை: அஜித்துடன் 'வாலி' படம் மூலம் நடிகையாக அறிமுகமான ஜோதிகா, கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின்னர் நடிக்காமல் இருந்த ஜோதிகா, தற்போது மீண்டும் ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் அதிகம் நடித்திராத ஜோதிகா, 71 வயது முன்னணி நடிகருடன் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

க்யூட் பேபி ஜோதிகா

க்யூட் பேபி ஜோதிகா

1999ல் வெளியான 'வாலி' திரைப்படம் அஜித்துக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்தது. இந்தப் படத்தின் மூலமாக தான் எஸ்ஜே சூர்யாவும் இயக்குநராக அறிமுகமானார். அஜித், சிம்ரன் ஆகியோருடன் இன்னொரு முக்கியமான கேரக்டரில் ஜோதிகா நடித்திருந்தார். வாலி படம் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமான ஜோதிகா, அதன்பிறகு தமிழ் ரசிகர்களின் க்யூட் பேபியாக மாறிவிட்டார். குறும்புத்தனமான நடிப்பு மூலம் அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆனார் ஜோதிகா.

சூர்யாவுடன் காதல், திருமணம்

சூர்யாவுடன் காதல், திருமணம்

'பூவெல்லாம் கேட்டுப்பார்', 'உயிரிலே கலந்தது' படங்களில் ஜோடியாக நடித்த சூர்யாவுக்கும் ஜோவுக்கும் காதல் பற்றிகொள்ள, அது மெல்ல மெல்ல தீயாய் பரவியது. இருவருக்கும் காதல் திருமணம் நடக்குமா என ரசிகர்களிடம் பெரிய விவாதமே சென்று கொண்டிருந்த நிலையில், இருவரும் கோலாகலமாக திருமண பந்தத்தில் இணைந்தனர். சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார் ஜோதிகா.

மீண்டும் நடிப்பில் கவனம்

மீண்டும் நடிப்பில் கவனம்

காதல், திருமணம், சூர்யா, குழந்தைகள், குடும்பம் என சென்றுகொண்டிருந்த ஜோதிகா, '36 வயதினிலே' படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜேக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பே என மீண்டும் கோலிவுட்டின் பிஸியான நாயகியாக கலக்கி வருகிறார் ஜோதிகா. இந்நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜோதிகா மீண்டும் மலையாள படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

சூர்யாவுக்கு இது ஓகே தானா?

சூர்யாவுக்கு இது ஓகே தானா?

மலையாளத்தில் ஏற்கனவே ராக்கிலிப்பட்டு, சீதா கல்யாணம் என இரண்டு படங்களில் மட்டும் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது ஜியோ பேபி இயக்கும் ஒரு படத்தில் ஜோதிகா கமிட் ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' உட்பட தரமான படங்களை இயக்கியுள்ளார் ஜியோ பேபி. இந்தப் படத்தில் மலையாள மெகா ஸ்டாரான மம்முட்டிக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 70 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாக ஜோதிகா நடிப்பது, ரசிகர்களுக்கே செம்ம ஷாக்கிங்காக அமைந்துள்ளது. இதற்கு சூர்யா எப்படி ஓக்கே சொன்னார் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X