»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

தாவூத் இப்ராகிமின் தம்பி அனீஸ் இப்ராகிமுக்கும், நடிகை நக்மாவுக்கும் தொடர்பு உள்ளதாகக் கூறப்படும்விவகாரம் குறித்து நக்மாவின் தங்கை ஜோதிகாவை விசாரிக்க மும்பை சிபிஐ அதிகாரிகள் சென்னை வரவுள்ளனர்.

அனீஸ்-நக்மா தொடர்புகள் குறித்து சமீபத்தில் பரபரப்புத் தகவல் வெளியானது. ஆனால் அந்த நக்மா நான்இல்லை, அது நடிகை மும்தாஜ்தான் (ஒரிஜினல் பெயர் நக்மா கான்) என்றும் குண்டைப் போட்டார் நக்மா.

ஆனால் நக்மாவின் புகாரை மும்தாஜ் மறுத்தார். அது தான் இல்லை என்றார் மும்தாஜ். இதனால் பெரும் குழப்பம்ஏற்பட்டுள்ளது.

எந்த நக்மாவுக்கு அனீஸுடன் தொடர்பு இருந்தது என்பது குறித்து மும்பை போலீஸாரும், சிபிஐ அதிகாரிகளும்தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதில், நக்மாவுக்கும், அனீஸுக்கும்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகத் தெரிய வந்துள்ளதாகக்கூறப்படுகிறது. இதையடுத்து நக்மாவின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியுள்ளது சிபிஐ.

மேலும், நக்மாகவுடன் தொடர்புடையவர்களை விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். முதலில் நக்மாவின்சகோதரியான நடிகை ஜோதிகாவை விசாரிக்க மும்பை கிரைம் பிராஞ்ச் மற்றும் சிபிஐ அதிகாரிகள் விரைவில்சென்னை வரவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

அந்த சமயத்தில் சென்னையில் நக்மாவுக்கு உள்ள சொத்துக்கள் குறித்தும் ஜோதிகாவிடம் கேட்டறியப்படும் என்றுதெரிகிறது.

இதற்கிடையே ஜோதிகாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலால் கவலையடைந்துள்ள சூர்யா, காக்க.. காக்க மூலம் தனக்குநெருக்கமான தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு ஜோதிகாவுக்கு சிக்கல் ஏதும் வருமாஎன்று கவலையோடு கேட்டு வருவதாகக் கூறுகிறார்கள்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கங்கூலியை நக்மா தானாகவே தான் போய் வலையில் வீழ்த்தினார் என்றும்கூறப்படுகிறது. இந்திய அணியை பலவீனப்படுத்த தாவூத் எடுத்துவிட்ட அஸ்திரங்களில் ஒன்று தான் நக்மாஎன்கிறார்கள்.

ஆனால், விவகாரம் அரசல் புரசலானதால் நக்மாவிடம் இருந்து கங்கூலி விலகிவிட்டார்.

Read more about: anis, chennai, jyothika, nagma
Please Wait while comments are loading...