»   »  சினிமாவில் மூட நம்பிக்கையை உடைத்தவர் கே பாலச்சந்தர்! - கவிஞர் வைரமுத்து

சினிமாவில் மூட நம்பிக்கையை உடைத்தவர் கே பாலச்சந்தர்! - கவிஞர் வைரமுத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் மூட நம்பிக்கையைத் தகர்த்தவர் இயக்குநர் கே பாலச்சந்தர்தான் என்று பேசினார் கவிஞர் வைரமுத்து.

தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்றவர் இயக்குநர் கே பாலச்சந்தர்.

அவர் பிறந்தது திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி ஆகும். நல்லமாங்குடியில்

பாலச்சந்தருடைய வீடு இருந்த இடத்தில் மழலையர் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது.

K Balachander is the revolutionist - Vairamuthu

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து கேட்டுக்கொண்டதன் பேரில் அந்த பள்ளிக்கூடத்தின் நுழைவு வாயிலின் இடது புறத்தில் பாலச்சந்தருக்கு சிலை வைக்க இடம் ஒதுக்கினர். அந்த இடத்தில் பாலச்சந்தருக்கு மார்பளவு வெண்கல சிலை வைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

விழாவில் பாலச்சந்தரின் மனைவி ராஜம், சிலையை திறந்து வைத்தார். இதில் இயக்குநர் மணிரத்னம்,

வசந்த்சாய், தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், பாலச்சந்தரின் குடும்பத்தினர் கந்தசாமி, புஷ்பா கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் கவிஞர் வைரமுத்து பேசுகையில், "86 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் பிறந்த பாலச்சந்தர் என்ற மாமனிதர் மாற்று சினிமா தரப்போகிற கலைஞன் என்பதை இந்த மண் அறிந்திருக்காது.

தாதாசாகேப் பால்கே விருது பெற போகின்ற பிள்ளை இவர் என்பதை உறவினர்கள் யாரும் அறிந்திருக்கமாட்டார்கள். கமல், ரஜினி என்கிற 2 பெரும் கலைஞர்களை தமிழ் மண்ணுக்கு தரப்போகிறார் என்பதை கலையுலகம் அறிந்திருக்காது.

கலையாக வந்தவன் இந்த இடத்தில் தான் சிலையாக போகிறான் என காற்று அறிந்திருக்காது. இந்த ஊரே ஒன்று சேர்ந்து பாலச்சந்தர் என்ற மாபெரும் கலைஞனுக்கு மரியாதை செலுத்துவதை கண்டு பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.

பாலச்சந்தர் என்பவர் ஒரு தனி மனிதர் அல்ல. அவர் ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தின் மூலம் தமிழ் சமுதாயமும், இளைஞர்களும் கற்று கொள்ள வேண்டிய பாடம் நிறைய உள்ளது.

சினிமாவுக்கு வருவது என்பதும், சினிமாவில் ஜெயிப்பது என்பதும் புல்லில் மேல் நடந்து பூப்பறிப்பது அல்ல.

முள்ளில் நடந்து தேர் இழுப்பது. அவ்வளவு சுலபமானது அல்ல. பாலச்சந்தர் திரைப்படத்துக்கு வரும்போது

நிறுவனங்கள், நடிகர்களின் ஆதிக்கத்தில் சினிமாத்துறை இருந்தது. நிறுவனங்கள் என்ற கோட்டையை உடைத்து,

நடிகர்கள் என்ற பெருஞ்சுவரை தாண்டி, நட்சத்திரத்தின் ஆதிக்கத்தை எல்லாம் தாண்டி இந்த கிராமத்தில் பிறந்த

பாலச்சந்தர் புகழ் கொடியை நாட்டியிருக்கிறார்.

சினிமா துறையில் நிலவி வந்த மூடநம்பிக்கையை உடைத்து, தனது முதல் படத்துக்கு நீர்குமிழி என பெயரிட்டார். இந்த பெயர் வைப்பதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். சினிமா காட்சிகளால் தனது

எண்ணங்களை, லட்சியங்களை தீட்டி காட்டியவர். கவிஞர் சொன்னதை சரியாக காட்சிப்படுத்த கூடிய ஒரே கலைஞன். "தண்ணீர், தண்ணீர்" என்ற படத்தில் பஞ்சத்தின் உச்சத்தை காட்டும் வகையில் ஒருவன், விறகுக்காக

64th National Film Awards Vairamuthu Proud Artist's

கோடாரியை எடுத்து கலப்பையை வெட்டி கொண்டிருப்பான். கலப்பையும், ஏறு மாடும் எங்கள் கடவுள். அந்த கடவுளையே உடைத்து சாப்பிடுகின்ற சூழ்நிலையை காட்டி பஞ்சத்தின் உச்சத்தையே காட்சியாக அமைத்திருப்பார்.

பாலச்சந்தரிடம் பாட்டு எழுதுவது என்பது மிக கடினமானது. ஒருவரின் உச்சபட்ச திறமையை வெளிக்கொண்டு

வரக்கூடிய ஆற்றல்மிக்கவர். பாலச்சந்தர் ஒரு மகாகலைஞன். அவர் இல்லையென்றால் ஒரு புதிய தலைமுறை தோன்றியிருக்காது. பாலச்சந்தர் படங்களில் வெற்றி படங்கள், தோல்வி படங்கள் என்பது இல்லை," என்றார்.

English summary
Poet Vairamuthu has praised late director K Balachander as a revolutionist in cinema

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil