twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சூடு பிடிக்கும் நடிகர் சங்கத் தேர்தல்.. விஷால் அணியை எதிர்த்து பாக்யராஜ் அணி போட்டி!

    நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணிக்கு எதிராக இயக்குனர் கே.பாக்யராஜ் தலைமையிலான அணி களம் இறங்கியுள்ளது.

    |

    சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியை எதிர்த்து கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணி போட்டியிடுகிறது. இதனால் நடிகர் சங்கத் தேர்தல் சூடுபிடித்துள்ளது.

    மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 23ம் தேதி சென்னையில் இத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அன்றே பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும்.

    K.Bhagyaraj and Isari Ganesh have teamed up against Vishal

    இத்தேர்தலில் நாசர் தலைமையிலான 'பாண்டவர் அணி'யில் தற்போதைய நிர்வாகத்தினரே மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும் மீண்டும் போட்டியிடுகின்றனர். துணைத்தலைவர் பதவிக்கு மட்டும் இம்முறை அந்த அணியில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பொன்வண்ணனுக்குப் பதில் பூச்சிமுருகன் போட்டியிடுகிறார். செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு கோவை சரளா, மனோபாலா, குஷ்பு உள்ளிட்ட 26 பேர் போட்டியிடுகின்றனர்.

    இந்த அணியை எதிர்த்து இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் தலைமையிலான அணி போட்டியிடும் என்ற தகவல் கடந்த சில நாட்களாகவே உலா வந்தது. தற்போது அதனை உறுதி செய்யும் வகையில், கே.பாக்யராஜ் தலைவர் பதவிக்கும் ஐசரி கணேஷ் பொதுச்செயலாளார் பதவிக்கும் போட்டியிடுவதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதயா, குட்டி பத்மினி ஆகியோர் துணைத்தலைவர் பதவிகளுக்குப் போட்டியிடுகின்றனர்.

    நடிகர் சங்கத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் 10ம் தேதியாகும். திரும்ப பெறுவதற்கு 14ம் தேதி தான் கடைசி நாள். அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வரும் 23ம் தேதி, சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஜானகி கல்லூரியில் தேர்தல் நடைபெறவுள்ளது.

    English summary
    Actor Director K.Bhagyaraj and producer Isari Ganesh have teamed up against Vishal team in south Indian artists association election.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X