twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மல்டிபிளக்ஸில் புறக்கணிக்கப்படும் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள்: குரல் கொடுத்த கே.பாக்யராஜ்

    |

    சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராகவும் சிறந்த நடிகராகவும் வலம் வந்தவர் கே.பாக்யராஜ்.

    பாக்யராஜ்ஜின் திரைக்கதையால் அவர் இயக்கிய பல படங்கள் மிகப் பெரிய வெற்றிப் பெற்றுள்ளன.

    இந்நிலையில், அவர் சிறு பட்ஜெட் திரைப்படங்களுக்கு தமிழக அரசிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

    வெளிநாட்டுல போய் ரயில்ல குத்தாட்டம்.. ஷாருக் படப் பாட்டுக்கு ஆடிய ஷிவாங்கி! வெளிநாட்டுல போய் ரயில்ல குத்தாட்டம்.. ஷாருக் படப் பாட்டுக்கு ஆடிய ஷிவாங்கி!

    திரைக்கதை வித்தகர்

    திரைக்கதை வித்தகர்

    திரையுலகில் பிரமாதமான திரைக்கதையாசிரியர்களில் முக்கியமானவர் கே. பாக்யராஜ். இவரது படங்கள் மக்களால் கொண்டாடப்படுவதற்கு காரணமே, திரைக்கதை தான். ஒருவரிக் கதையை வைத்துக்கொண்டு, அற்புதமான திரைக்கதைகளை எழுதி, படங்களை வெற்றி பெற வைத்துவிடுவார். கே. பாக்யராஜ்ஜின் திரைக்கதை எழுதும் திறமையை கண்டு, இந்தியத் திரையுலகமே ஆச்சரியப்பட்டுப் போனது ஒருகாலம்.

    சிறிய முதலீட்டில் பெரிய வெற்றிகள்

    சிறிய முதலீட்டில் பெரிய வெற்றிகள்

    கே.பாக்யராஜ்ஜின் பெரும்பாலான படங்கள் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதே ஆகும். கதைக்கும் திரைக்கதைக்கும் மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பாக்யராஜ், பிரமாண்டங்கள் இல்லாமல் எளிமையாகவும் யதார்த்தமாகவும் படங்களை இயக்குவதில் கெட்டிக்காரர். அதனால், அவரது படங்கள் அனைத்து சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, மிகப் பெரிய வசூல் செய்துள்ளன.

    சிறு பட்ஜெட் படங்களின் நிலை

    சிறு பட்ஜெட் படங்களின் நிலை

    முன்பெல்லாம் சிறு பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகளிலும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தன. ஆனால், தற்போதைய நிலை அப்படி இல்லை என்பதே வேதனை என ரசிகர்கள் கூறி வருகின்றனர். வணிக வளாகங்களில் இருக்கும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள், சிறிய பட்ஜெட் படங்களை புறக்கணிக்கின்றன. அவர்களுக்கு பெரிய பட்ஜெட்டில் உருவாகும் பிரமாண்ட படங்கள் மட்டுமே லாபகரமாக அமைகிறது.

    கே. பாக்யராஜ் அரசுக்கு கோரிக்கை

    கே. பாக்யராஜ் அரசுக்கு கோரிக்கை

    இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற 'டைட்டில்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாக்யராஜ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "மாற்றுத்திறனாளிகளுக்கு விதிவிலக்கு அளிப்பதுபோல, சிறிய பட்ஜெட் படங்களை வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகளில் வெளியிட சட்டம் கொண்டுவர வேண்டும் என்றார். அப்படி தமிழ்நாடு அரசு சட்டம் கொண்டுவந்தால், சிறு முதலீட்டுப் படங்களும் வெற்றி பெறும்" என அவர் கூறினார்.

    கோரிக்கை நிறைவேறுமா?

    கோரிக்கை நிறைவேறுமா?

    கே. பாக்யராஜ்ஜின் இந்த கோரிக்கைக்கு, திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர். கே. பக்யராஜ் முன்வைத்துள்ள இந்த கோரிக்கை, நிறைவேறுமானால், சிறு பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்களும் ஆரோக்கிமாக இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. சமீபகலமாக சிறு பட்ஜெட் படங்கள் பெரும்பாலும், நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    K. Bhagyaraj has requested the government to introduce a law to release small investment films
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X