Don't Miss!
- News
"சலங்கை ஒலி" இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார்.. சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
முதல் காதலை மறக்க முடியவில்லை... கே. பாக்யராஜ் அணிந்திருக்கும் மோதிரத்தின் ரகசியம் தெரியுமா?
சென்னை: தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் என்ற பெயர் பெற்றவர் கே பாக்யராஜ்.
பாரதிராஜாவின் உதவியாளராக இருந்து இயக்குநராக அறிமுகமான பாக்யராஜ், இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பாக்யராஜ் தனது மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு, மகள் சரண்யா ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார்.
சினிமாவில் ஏராளமான காதல் கதைகளை ரசிகர்களுக்கு விருந்து படைத்த பாக்யராஜ், அவரது முதல் காதலை இன்னும் மறக்க முடியாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் எழுத்தாளர்களுக்கு தட்டுப்பாடு..பாக்யராஜ் மீண்டும் குற்றச்சாட்டு

69வது வயதில் கே பாக்யராஜ்
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்து சினிமாவில் முகம் காட்டியவர் கே பாக்யராஜ். 16 வயதினிலே படத்தில் சிறு காட்சியில் நடித்திருந்த கே பாக்யராஜ், திரைக்கதை எழுதுவதில் பலே கில்லாடி. இவரின் திரைக்கதையும் ரசிகர்களுக்கு திரையில் கதை சொல்லும் உத்தியும், தமிழில் இதுவரை வேறு எந்த இயக்குநரும் செய்திடாத சாதனை எனலாம். கதை ஆசிரியர், திரைக்கதை வித்தகர், வசனகர்த்தா, இயக்குர், நடிகர் என அனைத்து துறையிலும் பல மாயாஜாலங்கள் செய்தவர். சுமார் 45 ஆண்டு காலம் திரையுலகில் தொடர்ந்து இயக்கிவரும் கே பாக்யராஜ், இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கே பாக்யராஜின் முதல் காதல்
சுவரில்லாத சித்திரங்கள், அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு, தாவணிக் கனவுகள், சின்ன வீடு, பவுனு பவுனுதான், ராசுக்குட்டி, வீட்ல விசேஷங்க என கே பாக்யராஜ் இயக்கிய திரைப்படங்கள் மெஹா ஹிட் அடித்துள்ளன. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தியிலும் படங்களை இயக்கியுள்ளார். தற்போது மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு, மகள் சரண்யா ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், கே பாக்யராஜின் முதல் காதல் குறித்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

நினைவில் நிற்கும் மோதிரம்
16 வயதினிலே படத்தில் பணிபுரியும் போதே நடிகை பிரவீனாவுடன் கே பாக்யராஜுக்கு நட்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. கமலின் மன்மத லீலை படத்தில் அறிமுகமான பிரவீனா, ரஜினியின் பில்லா உட்பட மேலும் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில், கே பாக்யராஜ், பிரவீனா இருவரும் நண்பர்களாக இருந்து 1981ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட திரை பிரபலங்களின் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. ஆனால், எதிர்பாராதவிதமாக திருமணம் நடந்த இரண்டே ஆண்டுகளில் பிரவீனா மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

உடைந்துபோன பாக்யராஜ்
இதனால் உடைந்துபோன பாக்யராஜ், அதன் பின்னர் முதல் காதலில் இருந்து மீண்டு வந்து நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் பிரவீனாவை மறக்க முடியாத கே பாக்யராஜ், அவர் அன்பளிப்பாக கொடுத்த மோதிரத்தை இன்றும் தனது விரலில் அணிந்துள்ளாராம். அந்த மோதிரத்தை பாக்யராஜ் இதுவரை எந்த காரணம் கொண்டும் கழட்டியதே இல்லையாம். அதுமட்டும் இல்லாமல் அவரது அலுவலகத்தில் பிரவீனாவின் புகைப்படத்தையும் வைத்து இன்றுவரை பாதுகாத்து வருகிறாராம். முதல் காதல், முதல் மனைவியின் நினைவாக 40 ஆண்டுகளாக அதே மோதிரத்துடன் பாக்யராஜ் வலம் வருவது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.