»   »  பாகுபலி 2 ஐ தமிழில் வெளியிடுபவர் யார் தெரியுமா?

பாகுபலி 2 ஐ தமிழில் வெளியிடுபவர் யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி படத்தின் இரண்டாம் பாகமான பாகுபலி - 2 வருகிற ஏப்ரல் 28 ம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது.

இந்திய இயக்குநர்களின் நம்பிக்கை நட்சத்திரமான எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி உள்ள இந்தப் படத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ்,நாசர், ரம்யா கிருஷ்ணா, அனுஷ்கா, தமன்னா உட்பட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

K Productions snapped Bahubali 2

இந்த படத்தை தமிழ் நாடு மற்றும் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளவர் கே.புரொடக்ஷன்ஸ் எஸ்.என்.ராஜராஜன். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தமிழகத்தில் வெளியிடும் கே.புரொடக்ஷன்ஸ் பட நிறுவனமே தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிநாடுகளிலும் வெளியிடுகிறது.

பாகுபலி முதல் பாகத்தை தமிழில் ஸ்டுடியோ கிரீன் வெளியிட்டது நினைவிருக்கலாம்.

அத்துடன் கே புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, ராணா, சத்யராஜ், ரெஜினா, நாசர், கருணாஸ் நடிக்க சத்யசிவா இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகும் புதிய படம் 'மடைதிறந்து' ரிலீசுக்கு தயாராகிறது. இதே படம் தெலுங்கில் 1945 என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது.

பாகுபலி - 2, மடைதிறந்து, 1945 என்று பிக பிரமாண்டமான படங்களின் மூலம் திரைத்துறைக்கு வந்திருக்கும் கே.புரொடக்ஷன்ஸ் இன்னும் பல புதிய படங்களை தயாரிக்க உள்ளது.

"பாகுபலி, பாகுபலி - 2 இரண்டு படங்களையும் மிக பிரமாண்டமாக தயாரித்ததின் மூலம் இந்திய சினிமாவை உலக அளவில் பேசவைத்த ஆர்கா மீடியா வொர்க்ஸ் ஷோபு எர்லகட்டா, பிரசாத் தேவிநேனி , இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆகியோருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்கிறார் தயாரிப்பளர் எஸ்.என். ராஜராஜன்.

English summary
New banner K Productions is releasing SS Rajamouli's Bahubali 2 in Tamil.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil