Don't Miss!
- News
ஆஹா.. அதென்ன ஆனந்த் அம்பானியின் குர்தா மேல பளபள "சிறுத்தை".. நீதா அம்பானி வேற கலக்கிட்டாங்களே..!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Lifestyle
ஆண்களே! நீங்க 'அந்த' விஷயத்தில் இப்படி செயல்பட்டால்... இருவரும் இருமடங்கு உச்சக்கட்டத்தை அடையலாமாம்!
- Finance
இந்தியா-வை தேடி வரும் உலக நாடுகள்.. டாலர்-க்கு செக்.. அமெரிக்கா திண்டாட்டம்..!
- Sports
இந்திய அணியில் உள்ள பெரிய வீக்னஸ்.. அதிக இழப்பை தரலாம்.. ரோகித்திற்கு இர்ஃபான் பதான் எச்சரிக்கை
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
மீனா கணவர் மரணத்தை வைத்து பொழப்பு நடத்துறியே நீயெல்லாம் ஒரு மனுஷனா? பயில்வானை விளாசிய ராஜன்!
சென்னை: நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்தது தென்னிந்திய சினிமாவையே சோகத்தில் ஆழ்த்திய நிலையில், பயில்வான் ரங்கநாதன் மட்டும் அதை வைத்தே பிழைப்பு நடத்துகிறார் என தயாரிப்பாளர் கே ராஜன் விளாசித் தள்ளி உள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பயில்வன் ரங்கநாதன் பெண்களையும், நடிகைகளையும் இழிவாக பேசுகிறார் என கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார் ராஜன்.
இந்நிலையில், தெற்கத்தி வீரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ராஜன் பயில்வான் ரங்கநாதனை பந்தாடி பேசியது பரபரப்பை கிளப்பி உள்ளது.
புஷ்பா
2
படத்தில்
ஃபகத்
ஃபாசில்
கிடையாதா...
அப்போ
அவர்
ரோலில்
யார்
நடிக்கிறாங்க
?

மீனா ரொம்ப நல்ல பொண்ணு
அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் வளர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் மிகப்பெரிய ஸ்டாராக வளர்ந்த மீனா குணத்தில் மிகவும் நல்ல பொண்ணு, அடக்கமானவர். அவருக்கு இப்படியொரு நிலை வரும் என கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை. என்னுடைய டபுள்ஸ் படத்தில் அவர் நடித்திருந்தார். அந்த படத்தில் இசையமைப்பாளராக ஸ்ரீகாந்த் தேவா அறிமுகமானார். தெற்கத்தி வீரன் படத்திற்கும் அவர் இசையமைத்திருப்பது பாராட்டுக்குரியது என்று பேசினார்.

மரணத்தில் மர்மம் இருக்குன்னு
மீனா கணவர் உடல் நலக் குறைவால் இளம் வயதில் காலமாகி விட்டார். கணவனை இழந்து மீனா தவித்து வருகிறார். அப்பாவை இழந்து குழந்தை நைனிகா தவித்து வருகிறார். இந்த நிலையில், மீனா கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஒரு யூடியூபர் போட்டு பணம் சம்பாதிக்கிறான். நான் ஏன் சுத்தி வளைச்சு பேசுறேன். டைரக்ட்டாவே சொல்றேன் பயில்வான் ரங்கநாதன் அப்படியொரு வீடியோவை போட்டுருக்கான் என விளாசி உள்ளார் தயாரிப்பாளர் கே. ராஜன்.

மெடிகல் சர்டிபிகேட் வேணுமாம்
ரஜினிகாந்த் முதல் ஒட்டுமொத்த திரையுலகமும் மீனாவுக்கு ஆறுதல் கூறி வரும் நிலையில், பயில்வான் ரங்கநாதன் மட்டும் மெடிக்கல் சர்டிபிகேட்டை ஏன் அதிகாரப்பூர்வமாக வெளியே விடவில்லை எனக் கேட்டு அசிங்கமான வேலையை பார்க்கிறான் என கண்டமேனிக்கு திட்டி உள்ளார் கே. ராஜன். இதுபோன்ற நபர்களை சும்மா விடக் கூடாது என ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகளிலும் திட்டித் தீர்த்தார்.
Recommended Video

நடவடிக்கை எடுக்கலைன்னா
போலீஸில் புகார் அளித்தும் இதுவரை பயில்வான் ரங்கநாதன் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படியே விட்டு விட்டால், அவரும் தான் செய்வது எல்லாம் சரி என்பது போலவே அடுத்தடுத்த பெண்களையும் நடிகைகளையும் டேமேஜ் செய்வார். போலீஸ் அதிகாரிகள் விரைவாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கே. ராஜன் அந்த இசை வெளியீட்டு விழாவில் பேசினார். ஜாக்குவார் தங்கம், பாக்கியராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.