Don't Miss!
- News
எங்கள் வேட்பாளர் ரெடி.. ‘ஆப்ஷன் 2’.. அதுக்குதான் ஓபிஎஸ் ‘வெய்ட்’ பண்றார்.. போட்டு உடைத்த புகழேந்தி!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
செருப்பால அடிவாங்கியும் புத்திவரல… பயில்வான் ரங்கநாதனை எச்சரித்த கே.ராஜன் !
சென்னை : தமிழில் சினிமாவில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன். இவர் திரைப்படங்களில் நடித்து பிரபலமானதை விட நடிகர், நடிகைகளை தரக்குறைவாக விமர்சித்து மிகவும் பிரபலமானார்.
நடிகை, நடிகர்களின் அந்தரங்க விஷயங்களை அருகில் இருந்து பார்த்தது போல தனது யூடியூப் சேனலில் பேசி வருகிறார்.
நடிகர் பயில்வான் ரங்கதாதன் மீது நடவடிக்கை கோரி தயாரிப்பாளர் கே.ராஜன் தலைமையிலான தமிழர் மக்கள் இயக்கம் சார்பில் சென்னை காவல் துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காத்து வாக்குல ரெண்டு காதல் செய்த அமீர்... மற்றொரு பெண்ணுக்கு பிரபோஸ்... முகம் வாடிய பாவனி!

பயில்வான் ரங்கநாதன்
நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் கிட்டதட்ட 10க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களில் பேசி வருகிறார். நடிகைகளுக்கு சினிமாவில் எப்படி வாய்ப்பு கிடைத்தது, நடிகைகள் எப்படி பிரபலமானார்கள், சினிமா பிரபலங்களின் விவாகரத்து என சகல விஷயத்திலும் மூக்கை நுழைத்து, அவர்கள் குறித்து அசிங்கமாக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

காவல்நிலையத்தில் புகார்
சினிமா பிரபலங்கள், பெண்கள் குறித்தும் அவதூறான கருத்துகளை இணையத்தில் பரப்பி வருவதால், பயில்வான் ரங்கநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, தமிழர் மக்கள் இயக்கம் சார்பில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் திருமலை, உள்ளிட்டோர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

மிரட்டி பணம் சம்பாதிக்கிறார்
இதையடுத்து,செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், பயில்வான் ரங்கநாதன் நடிகர், நடிகைகள் மற்றும் பெண்களை தவறாக பேசி வருகிறார். மேலும், நடிகர்,நடிகைகளை இணைத்து பொய்யான தகவல்களை வெளியிட்டு பிறகு அவர்களை மிரட்டி பணம் சம்பாதிக்கிறார். இது குறித்து, ஏற்கனவே பலர் புகார் அளித்துள்ளனர் என்றார்.

செருப்பால் அடித்தும் புத்திவரல
பெண்களை அவமானப்படுத்தும் அற்பத்தனமான செயலை ரங்கநாதன் செய்து வருகிறார். கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார். சினேகா, சுகன்யா இன்னும் பல நடிகைகளை பற்றி அவதூறாக பேசியுள்ளார். ஒரு முறை நடிகை ராதிகா பற்றி தவறாக பேசியதால், ராதிகா செருப்பால அடித்துள்ளார் அப்பவும் அவருக்கு புத்திவரல. இது எல்லாமே பணத்திற்காகத்தான்.

இது மஞ்சள் யூடியூப் சேனல்
மஞ்சள் பத்திரிக்கை போல...மஞ்சள் யூடியூப் சேனல் நடித்தி வருகிறார் பயில்வான். சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ரங்கநாதன், என்னை யாரும் எதுவும் செய்யமுடியாது, என்னை யாராவது தாக்க வந்தால் அரிவாளால் அவர்களின் கழுத்தை அறுத்துவிடுவேன் என மிரட்டல் விடுக்கும் வகையில் ரங்கநாதன் பேசி வருவதால் அவர் மீது நடிகர், நடிகைகள் புகார் அளிக்க பயப்படுவதுடன் கொலை செய்து விடுவாரோ என்ற அச்சத்தில் எதுவும் பேசாமல் உள்ளனர். எனவே காவல்துறை, பயில்வான் ரங்கநாதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என கே ராஜன் கேட்டுக்கொண்டார்.