இரண்டு ஹீரோயின்களா...நிஜமாவே ஜென்டில்மேன் 2 தான் எடுக்க போறாங்களா?
சென்னை : ஜென்டில்மேன் 2 படத்தில் இரண்டு ஹீரோயின்கள் உள்ளதாக தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அறிவித்துள்ளதால், ஏன் ட்விஸ்ட் என்ற பெயரில் இப்படி குழப்புகிறார் என ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர்.
1993 ம் ஆண்டு ஷங்கர் டைரக்டராக அறிமுகமான படம் ஜென்டில்மேன். இதில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஹீரோவாக நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த படத்தை கே.டி.குஞ்சுமோன் தயாரித்திருந்தார். இந்த படம் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. இந்நிலையில் கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க போவதாக குஞ்சுமோன் சமீபத்தில் அறிவித்தார்.

எதிர்பார்ப்பை தந்த ஜென்டில்மேன் 2
இதனால் டைரக்டர் யார், இதையும் ஷங்கர் தான் இயக்க போகிறாரா என, ஹீரோ யார் என்ற பல கேள்விகளுக்கு எழுந்தன. இந்த படம் பற்றிய அப்டேட் எப்போது வரும் என காத்திருந்தனர். ஆனால் டைரக்டர், ஹீரோ பற்றி அறிவிப்பதற்கு பதில் முதல் அறிவிப்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிற்கு பதில் பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களுக்கு இசையமைத்த கீரவாணி நியமிக்கப்படுவதாக அறிவித்தார். அதனால் ஜென்டில்மேன் 2 வேற லெவல் பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அட இப்படி ஏமாத்திட்டாரே
இதைத் தொடர்ந்து ஜென்டில்மேன் 2 ஹீரோயின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா என்ற தகவல் சோஷியல் மீடியாவில் பரவியது. அப்போ ஹீரோ நிச்சயம் பெரிய ஸ்டாராக இருக்கும் என அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கும் விதமாக தன்னை தவிர அனைவரும் புதிது என்பதை சூசகமாக சொல்லி விட்டார் கே.வி.குஞ்சுமோன். ஜென்டில்மேன் 2 படத்தில் ஹீரோயின் நயன்தாரா தான். ஆனால் அனைவரும் நினைப்பது போல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கிடையாது. நயன்தாரா சக்கரவர்த்தி என்பவர் தான் ஹீரோயின் என நேற்று அறிவித்தார்.

இரண்டு ஹீரோயின்களா
அது மட்டுமல்ல நயன்தாரா மட்டுமின்றி, படத்தில் இன்னொரு ஹீரோயினும் இருக்கிறாராம். அவர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாம். இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்து, நிஜமாவே இவங்க ஜென்டில்மேன் 2 தான் எடுக்க போறாங்களா. இல்லை வேறு ஏதாவது படம் எடுக்க போறாங்களா என கேட்க துவங்கி விட்டனர்.

நிஜமா ஜென்டில்மேன் 2 படம் தானா
ஜென்டில்மேன் படத்திலேயே சுபஸ்ரீ மற்றம் மதுபாலா இருவரும் ஹீரோயின்களாக காட்டப்படுவார்கள். ஆனால் இருவருமே அர்ஜுனை ஒன் சைடாக தான் காதலிப்பார்கள். அதில் சுபஸ்ரீ, போலீசாக வரும் சரண்ராஜை திருமணம் செய்து கொண்டு போய் விடுவார். மதுபாலா கடைசி வரை காதலை சொல்லாமல் அமைதியாக இருக்கும் கேரக்டராக காட்டப்படுவார். 20 ஆண்டுகளுக்கு முன் பாடலுக்காக பல ஆக்ஷன் படங்களில் பெயருக்கு ஹீரோயின் என்று ஒருவரை வைத்தார்கள் ஓகே. ஆனால் தற்போது ஹீரோயின், டூயட் என எதுவும் இல்லாமல் கைதி, வலிமை போன்ற படங்களை எடுத்து ஹிட் ஆக்கி வருகிறார்கள்.

எதுக்கு இரண்டு ஹீரோயின்
இதில் எதுக்கு இரண்டு ஹீரோயின். நிஜமாவே இது ஆக்ஷன் படமா அல்லது காதல் படமா என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். ஹீரோயின் அறிவிப்பிலேயே ஜென்டிமேன் 2 படம் மீதான ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் காலி செய்து விட்டாரே குஞ்சுமோன் என பலர் நொந்து கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











