»   »  மலேசிய நீர்வீழ்ச்சியில் சிக்கி காணாமல் போன "க க க போ" நாயகன்

மலேசிய நீர்வீழ்ச்சியில் சிக்கி காணாமல் போன "க க க போ" நாயகன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'க க க போ' படத்தின் நாயகன் மலேசியா நீர்வீழ்ச்சியில் பெற்றோர் கண்முன்னர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விஜய் என்பவர் இயக்கியிருக்கும் படம் 'க க க போ' இப்படத்தின் மூலம் கேசவன் என்பவர் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். கேசவனுடன் இணைந்து சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் மற்றும் பவர் ஸ்டார் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

Ka Ka Ka Po Actor Missing in Falls

படப்பிடிப்பு முழுவதும் முடிந்து தற்போது படம் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் நாயகன் மலேசியாவில் உள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் பெற்றோரின் கண்முன்னே இழுத்துச் செல்லப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

'க க க போ' படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இவர் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியை தனது குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கும் ஆசையில்தான் கேசவன் மலேசியா சென்றிருக்கிறார்.

சென்ற இடத்தில் கேசவன் தனது பெற்றோர் கண்முன்னே நீர்வீழ்ச்சியில் சிக்கி மாயமாகியுள்ளார். தற்போது கேசவனின் உடலை மலேசியா காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அடுத்த வாரம் இப்படத்தின் இசை வெளியீடு நடைபெற இருந்த நிலையில், நாயகன் நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்ட செய்தி கேட்டு க க க போ படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

English summary
Ka Ka Ka Po Debutant Actor Kesavan Missing in Malaysia Falls, Now Malaysian Police Searching His Body.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil