»   »  'கனா காணும் காலங்கள்' 'காதல் சொல்ல வந்தேன்' பாலாஜிக்கு டும் டும் டும்!

'கனா காணும் காலங்கள்' 'காதல் சொல்ல வந்தேன்' பாலாஜிக்கு டும் டும் டும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான பாலாஜி- பிரீத்தி திருமணம் இன்று நடைபெற்றது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர் பாலாஜி. பள்ளி மாணவர்களின் பதின்ம வயதுகளை எடுத்துக் கூறிய இந்த நாடகம் இளைய தலைமுறையிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.


Kaadhal Solla Vandhen fame actor Balaji Marriage

தொடர்ந்து பட்டாளம் படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் பாலாஜி அறிமுகமானார். தனி ஹீரோவாக பாலாஜி நடித்து வெளியான படம் காதல் சொல்ல வந்தேன்.


இதில் தன்னைவிட வயது அதிகமான பெண்ணை காதலிக்கும் மாணவராக நடித்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.


இதனால் சோலோ ஹீரோவாக இல்லாமல் ஓரளவு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் பிரீத்தி என்ற பெண்ணைக் கரம்பிடித்து பாலாஜி மண வாழ்க்கையில் நுழைந்திருக்கிறார்.பிரீத்தி-பாலாஜி திருமணம் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இன்று விமரிசையாக நடைபெற்றது.இதுகுறித்து அவர் ''இந்த நாளுக்காகத் தான் காத்திருந்தேன்.


உங்கள் வாழ்த்து மற்றும் ஆசீர்வாதங்களுடன் எனது மண வாழ்க்கையைத் துவங்குகிறேன்'' என்று கூறியிருக்கிறார்.


வாழ்க பல்லாண்டு!


English summary
Kaadhal Solla Vandhen fame actor Balaji Marriage Held on Today.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil