»   »  ஷூட்டிங்கின்போது தான் முதன்முதலாக பீட்சா சாப்பிட்டோம்: காக்கா முட்டை சிறுவர்கள்

ஷூட்டிங்கின்போது தான் முதன்முதலாக பீட்சா சாப்பிட்டோம்: காக்கா முட்டை சிறுவர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: படப்பிடிப்பின்போது தான் முதல்முறையாக நாங்கள் பீட்சா சாப்பிட்டோம் என்று காக்கா முட்டை படத்தில் நடித்த ரமேஷ் மற்றும் விக்னேஷ் தெரிவித்துள்ளனர்.

மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை படத்தில் சின்ன காக்கா முட்டையாக நடித்தவர் ரமேஷ், பெரிய காக்கா முட்டையாக நடித்தவர் விக்னேஷ். ஒரு பீட்சா சாப்பிட சேரி சிறுவர்கள் இத்தனை கஷ்டப்பட வேண்டியுள்ளதா என்று தான் படத்தை பார்ப்பவர்களுக்கு தோன்றுகிறது.

இந்நிலையில் ரமேஷ் மற்றும் விக்னேஷ் படம் பற்றியும் பீட்சா பற்றியும் கூறுகையில்,

கடற்கரை

கடற்கரை

நான் கடற்கரையில் விளையாடியபோது இயக்குனர் மணிகண்டன் என்னை புகைப்படம் எடுத்து அதை என்னிடம் காண்பித்தார். ஒரு வாரம் கழித்து என் வீட்டுக்கு வந்து என்னை படத்தில் நடிக்க அனுமதிக்குமாறு அவர் என் அம்மாவிடம் கேட்டார். அம்மாவும் சம்மதித்தார் என்றார் விக்னேஷ்.

பயம்

பயம்

ஒழுங்காக நடிக்காவிட்டால் இயக்குனர்கள் திட்டுவார்கள் என்று நினைத்து படத்தில் நடிக்க பயந்தேன். ஆனால் மணிகண்டன் சார் அப்படி இல்லை. படத்தில் நடிக்கும் முன்பு எங்களுக்கு 40 நாட்கள் பயிற்சி அளித்தார்கள் என்று விக்னேஷ் தெரிவித்தார்.

கடத்தல்

கடத்தல்

நான் கடற்கரையில் விளையாடியபோது 2 பேர் வந்து என்னை புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டார்கள். புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டேன். அவர்களும் புகைப்படம் எடுத்தார்கள். ஆனால் அவர்கள் என்னை கடத்தப்போகிறார்களோ என்று நினைத்து அங்கிருந்து சென்றுவிட்டேன் என்று மனதில் பட்டத்தை தெரிவித்தார் ரமேஷ்.

படம்

படம்

படத்தில் என்னை நடிக்க வைக்க புகைப்படம் எடுத்தார்கள் என்று பின்பு தான் தெரிய வந்தது. படத்தில் நடிக்கிறாயா என்று என் அம்மா கேட்டதற்கு சரி என்றேன். நான் படம் பார்த்ததும் இல்லை, படப்பிடிப்பு பற்றி கேள்விப்பட்டதும் இல்லை. அதனால் முதலில் பயமாக இருந்தது என்றார் ரமேஷ்.

பீட்சா

பீட்சா

பீட்சா சாப்பிட வேண்டும் என்று ஒரு முறை ஆசைப்பட்டேன். ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை. படப்பிடிப்பின் போது தான் முதல்முறையாக பீட்சா சாப்பிட்டேன் என்றார் ரமேஷ். என் குடும்ப சூழலில் நான் எதற்கும் ஆசைப்படுவது இல்லை. படத்தில் நடிக்கையில் தான் பீட்சா பற்றியே தெரிய வந்தது. எனக்கும் சரி, ரமேஷுக்கும் சரி பீட்சா பிடிக்கவில்லை என்று விக்னேஷ் கூறினார்.

குடும்பம்

குடும்பம்

நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன், ரமேஷ் 8ம் வகுப்பு படிக்கிறான். படம் ரிலீஸான பிறகு அனைவரும் எங்களை பாராட்டியதுடன் அன்புடன் நடந்து கொள்கிறார்கள். நான் காசிமேட்டில் குடும்பத்துடன் வசிக்கிறேன். என் வீட்டில் 15 பேர் உள்ளனர். என் வீட்டுக்கு அருகே வசித்து வந்த ரமேஷ் தற்போது எண்ணூரில் வசிக்கிறான். அவனது தந்தை ஒரு மீனவர் என்று விக்னேஷ் தெரிவித்தார்.

English summary
Kaaka Muttai kids Ramesh and Vignesh have got their first taste of pizza only during the shoot of the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil