»   »  ஆஸ்கர் ரேஸில் 'காக்கா முட்டை'

ஆஸ்கர் ரேஸில் 'காக்கா முட்டை'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய ஆஸ்கர் ஜூரியாக பிரபல தயாரிப்பாளர், நடிகர் மற்றும் இயக்குநர் என்று பன்முகங்களைக் கொண்ட அமோல் பாலேகர் அண்மையில் நியமிக்கப்பட்டார்.

இந்த வருடம் ஆஸ்கர் விருதிற்கு செல்லும் இந்திய படங்களை அமோல் பாலேகர் குழு விரைவில் தேர்வு செய்யவிருக்கிறது, இதற்காக சமீபத்தில் ஹைதராபாத் வந்த அமோல் பாலேகர் குழுவினர் சுமார் 45 இந்தியப் படங்களை பார்த்திருக்கின்றனர்.

இதில் தமிழ்ப் படமான காக்கா முட்டை மற்றும் தென்னிந்தியாவின் மாபெரும் வெற்றிப் படமான பாகுபலி ஆகிய 2 படங்களும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எந்தெந்தப் படங்கள் இந்தப் பட்டியலில் இருக்கின்றன என்று பார்க்கலாம்.

காக்கா முட்டை

காக்கா முட்டை

2 சிறுவர்களின் வாழ்வியலை அழகிய கவிதையாக எடுத்துக் கூறி பார்ப்பவர்களின் உள்ளங்களை வசீகரித்த திரைப்படம் காக்கா முட்டை, படம் வெளிவருவதற்கு முன்பே 2 தேசிய விருதுகளை பெற்றது.

வசூலிலும் குறையில்லை

வசூலிலும் குறையில்லை

பெரிய நடிகர்கள், கமர்ஷியல், மசாலா போன்ற நெடிகள் எதுவும் இல்லாமல் வெளிவந்த காக்கா முட்டை திரைப்படம் வசூலிலும் குறை வைக்கவில்லை. மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் இதுவரை சுமார் 7 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்து இருக்கிறது, மேலும் சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் 50 நாட்களைக் கடந்த படம் என்ற பெருமையையும் படம் பெற்றிருக்கிறது.

தயாரித்த தனுஷ்

தயாரித்த தனுஷ்

காக்கா முட்டை படத்தை வெளிக் கொண்டுவந்த பெருமை நடிகர் தனுஷையே சேரும். தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இருவரும் இணைந்து படத்தை தயாரித்திருந்தனர். உலகமெங்கும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வெளியிட்ட இப்படத்திற்கு, நல்லதொரு இசையை அளித்திருந்தார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.

இயக்குநர் மணிகண்டன்

இயக்குநர் மணிகண்டன்

காக்கா முட்டை திரைப்படத்தின் கதை, திரைக்கதை மட்டுமின்றி ஒளிப்பதிவையும் சேர்த்து செய்து படத்தை அழகாக செதுக்கியிருந்தார் இயக்குநர் மணிகண்டன்.இவர் இயக்கிய முதல் படமே 2 தேசிய விருதுகளை வென்று வசூலிலும் குறை வைக்காமல் ஓடியது அடுத்ததாக தற்போது ஆஸ்கர் பிரிவிலும் போட்டியிடத் தயாராகியிருக்கிறது. தமிழ்ப் படங்களில் இருந்து காக்கா முட்டை மட்டுமே ஆஸ்கர் விருதிற்கு தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி

பாகுபலி

கடந்த மாதம் வெளிவந்த இத்திரைப்படம் உலகமெங்கும் இதுவரை சுமார் 587 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்திருக்கிறது. மிகப்பெரிய போஸ்டர் என்ற பெருமைக்காக ஏற்கனவே கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இப்படம், தற்போது ஆஸ்கர் பிரிவிலும் போட்டியிடத் தகுதி பெற்றிருக்கிறது.

45 படங்கள்

45 படங்கள்

இந்திய அளவில் சுமார் 45 படங்கள் ஆஸ்கர் பிரிவில் நுழைய தகுதி பெற்றிருக்கின்றன. காக்கா முட்டை மற்றும் பாகுபலியுடன் இணைந்து அமீர்கானின் பிகே, நீரஜின் மாஸான், பிரியங்கா சோப்ராவின் மேரி கோம் போன்ற படங்களும் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன. ஆஸ்கர் பிரிவில் நுழைய எந்தெந்தப் படங்கள் தகுதி பெற்றிருக்கின்றன போன்ற முழு விவரங்கள் செப்டம்பர் மாதம் 25 ம் தேதி வெளியாகவிருக்கின்றது.

காக்கா முட்டைக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்புதான்.....

English summary
2015 Oskar: Kaaka Muttai Entry From The Tamil Industry, The final selection will be revealed on 25 September.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil