»   »  காலா வழக்கு: ரஜினியுடன் உள்ள போட்டோக்கள் நீதிமன்றத்தில் தாக்கல்!

காலா வழக்கு: ரஜினியுடன் உள்ள போட்டோக்கள் நீதிமன்றத்தில் தாக்கல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காலா படத்தின் கதைக்கு உரிமை கோரி வரும் ராஜசேகரன் என்பவர், ரஜினியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோக்கள் என்று கூறி சில படங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 'காலா' படத்துக்கு தடைகோரி, சென்னை 4-வது நகர உரிமையியல் நீதிமன்றத்தில் ராஜசேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.


இந்த வழக்கிற்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், விளம்பரத்துக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராஜசேகரனை யார் என்றே தெரியாது என்று கூறியிருந்தார்.


இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் ரஜினிகாந்துடன் உள்ள தொடர்பை நிரூபிக்கும் விதமாக சில புகைப்படங்களை ராஜசேகரன் தாக்கல் செய்தார்.


இதையடுத்து இந்த வழக்கின் இருதரப்பு வக்கீல்களின் வாதங்களுக்காக, விசாரணையை 8-ந்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

English summary
Rajasekaran, the person who claimed the rights for Kaala story has submitted photos of him with Rajinikanth

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil