»   »  திருட்டுத்தனமாக வெளியான 'காலா' சண்டைக்காட்சி... படக்குழுவினர் அதிர்ச்சி!

திருட்டுத்தனமாக வெளியான 'காலா' சண்டைக்காட்சி... படக்குழுவினர் அதிர்ச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
இணையதளத்தில் வெளியான காலா பட வீடியோ

சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், 'காலா' படத்தின் சண்டைக் காட்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகி, வேகமாகப் பரவிவருகிறது.

அந்த வீடியோவில் ரஜினி, வில்லன் ஒருவரைத் தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இதனால், படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

காலா

காலா

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடத்துள்ள 'காலா' படத்தின் ஷூட்டிங் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. அதேசமயம் டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தின் 2-ம் பாகம் '2.0' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ரிலீஸ் குழப்பம்

ரிலீஸ் குழப்பம்

முதலில், ஷங்கர் இயக்கத்தில் தயாராகிவரும் '2.0' படம் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், படத்தில் கிராஃபிக்ஸ் பணிகள் முடியாததால், இந்த இரு படங்களில் எந்த படம் முதலில் வெளிவரும் என்பதில் பெரும் குழப்பம் நீடித்துவந்தது.

ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ்

ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ்

இந்நிலையில், 'காலா' திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்தத் தகவலை இப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதனால், இப்போதிலிருந்தே ரசிகர்கள் படத்தைக் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.

லீக்கான ஃபைட் சீன்

லீக்கான ஃபைட் சீன்

இந்நிலையில், 'காலா' படத்தின் சண்டைக் காட்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகி, வைரலாக பரவிவருகிறது. அதில் ரஜினிகாந்த், வில்லன் ஒருவரைத் தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

படக்குழு அதிர்ச்சி

படக்குழு அதிர்ச்சி

சமூக வலைதளங்களில் வெளியான 'காலா' சண்டைக்காட்சி வீடியோவால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. சில விநாடிகள் ஓடும் இந்தக் காட்சி எப்படி வெளியானது என படக்குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

English summary
Rajinikanth's 'kaala' confirmed April 27 release. In this case, a fight scene video of 'kaala' movie leaked on social networks and going viral now.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil