»   »  காலாவுக்கு சிலபல வெட்டுகளுடன் யுஏ சான்று!

காலாவுக்கு சிலபல வெட்டுகளுடன் யுஏ சான்று!

Posted By:
Subscribe to Oneindia Tamil
வெட்டப்பட்ட காலா. கொதித்தெழும் ரசிகர்கள்!

ரஜினிகாந்த் நடித்த காலா படத்துக்கு யுஏ சான்று வழங்கியுள்ளது மண்டல தணிக்கைக் குழு.

கபாலிக்குப் பிறகு பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் காலா. இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் 27-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.

Kaala gets UA

தமிழ் சினிமாவில் ஸ்ட்ரைக் நடந்து வரும் நிலையில், தயாரிப்பாளர் சங்கத்திடம் சிறப்பு அனுமதிக் கடிதம் வாங்கி, இந்தப் படத்தை சென்சாருக்கு அனுப்பி வைத்தனர்.

காலா சென்சார் ஆனது குறித்து கடந்த மூன்று நாட்களாகவே பல்வேறு செய்திகள் வந்தன. இந்த நிலையில் காலா சென்சார் செய்யப்பட்டதை படத்தைத் தயாரித்த வுண்டர்பார் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

Kaala gets UA

சில கட்டுகளுடன் படத்துக்கு யு ஏ சான்று வழங்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளனர்.

Kaala gets UA

இந்தப் படத்தில் வன்முறைக் காட்சிகள், அரசியல் சர்ச்சைக் காட்சிகள் அதிகம் இருந்ததால் சில வெட்டுகளை சென்சார் பரிந்துரைத்துள்ளது. இந்த வெட்டுகள் இல்லாமல் ஏ சான்று தருவதாகக் கூறியதால், யுஏக்கு ஓகே சொன்னதாம் படக்குழு.

English summary
Rajinikanth’s Kaala has cleared the censors with UA certificate.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X