»   »  'காலா' ஹீரோயினுக்கு ஆச்சரியம் கொடுத்த ரஜினி!

'காலா' ஹீரோயினுக்கு ஆச்சரியம் கொடுத்த ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினியின் அரசியலா காலா டீசர்?- வீடியோ

மும்பை : பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியின் 'காலா' படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் ஹூமா குரேஷி. 'கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்' படத்தில் அறிமுகமாகி பாலிவுட்டில் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கும் ஹூமா குரேஷிக்கு தற்போது தென்னிந்திய படங்களில் வாய்ப்பு வருகிறதாம்.

'காலா' படத்தில் நடித்து வந்தபோது ரஜினியின் எளிமை தன்னை வியக்க வைத்ததாகவும், ஒரு மகளைப் போலவே அவர் தன்னிடம் பாசம் காட்டியதாகவும் கூறிய ஹூமா குரேசி, தனது வீட்டில் இருந்தே படப்பிடிப்பு தளத்துக்கு உணவு வரவைத்து தனக்கு ரஜினி விருந்து கொடுத்ததை பெருமையாகச் சொல்லியிருக்கிறார்.

Kaala heroine Huma qureshi gets chances from south india

தமிழ்நாட்டு மக்களின் மரபு, கலாச்சாரங்களை தான் ரொம்பவே நேசிப்பதாக கூறும் ஹூமா குரேசி, காலா படத்திற்கு பிறகு தொடர்ந்து தென்னிந்திய மொழிப்படங்களில் நடிப்பதில் தான் ஆர்வமாக இருப்பதாகவும் சொல்கிறார்.

தற்போது சில தமிழ், தெலுங்குப் படங்களில் நடிப்பது குறித்து சில டைரக்டர்கள் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறும் ஹூமா குரேசி, காலாவிற்கு பிறகு மும்பையில் இருந்து தென்னிந்தியாவுக்கு இடம் பெயரவும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

Kaala heroine Huma qureshi gets chances from south india

'சந்திரமுகி' படத்தில் ரஜினி ஜோடியாக நடித்த நயன்தாரா லேடி சூப்பட்ஸ்டார் ஆனது போல, ரஜினியுடன் நடித்திருக்கும் ஹூமா குரேஷிக்கும் நிறைய வாய்ப்பு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more about: kaala huma qureshi காலா
English summary
Huma Qureshi is the heroine of Rajini's 'kaala' movie. After Kaala, she has said that she has a chance to move from Mumbai to South India.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X