»   »  'கரிகாலன்' பெயர் ரஜினிக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் வைத்துள்ளோம்! - பா ரஞ்சித்

'கரிகாலன்' பெயர் ரஜினிக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் வைத்துள்ளோம்! - பா ரஞ்சித்

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதிய படத்துக்கு காலா - கரிகாலன் என்ற தலைப்பு, ரஜினியின் விருப்பப்படியே சூட்டப்பட்டதாக இயக்குநர் பா ரஞ்சித் கூறியுள்ளார்.

ரஜினி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இன்று வெளியானதிலிருந்து, அந்த தலைப்பு குறித்து பல்வேறு செய்திகள், விளக்கங்கள் வந்து கொண்டுள்ளன.


Kaala Karikalan title is the choice Rajinikanth - Pa Ranjith

இந்த நிலையில் படத்தின் இயக்குநர் பா ரஞ்சித் இதுகுறித்து அளித்த ஒரு விளக்கத்தில், "கரிகாலன் நீதி தவறாத தமிழ் மன்னன். அந்தப் பெயர் ரஜினிக்கு மிகவும் பிடித்தமான பெயர் என்பதால் சூட்டினோம்," என்று கூறினார்.


தன்னை பச்சைத் தமிழன் என்று அறிவித்துள்ள ரஜினிகாந்த், தன் படத்துக்கு 'இமயம் வென்ற' தமிழ் மன்னன் கரிகாலனின் பெயரைச் சூட்டியுள்ளது அரசியல் தலைவர்களுக்கும் இன்னும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் இன்னொரு பெயர் கரிகாலன் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Director Pa Ranjith says that Kaala Karikalan title is the choice Rajinikanth
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil