»   »  கல்லா கட்டும் காலா!

கல்லா கட்டும் காலா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
காலா விளம்பர ஒப்பந்தங்கள் டீல் ஓவர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் - திரையரங்கு உரிமையாளர்களும் கடந்த 36 நாட்களாக முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது, புதிய படங்கள் ரீலீஸ் செய்யப்படாததால் தியேட்டர்கள் மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு மூல காரணம் படங்களை திரையிட டிஜிட்டல் நிறுவனங்கள் வசூலித்து வரும் அதிகபட்ச கட்டண உயர்வு.

Kaala mints huge money

இதனை இனிமேல் நாங்கள் கட்ட மாட்டோம் என தயாரிப்பாளர்கள் தீர்மானமாக அறிவித்ததுதான் வேலை நிறுத்தம் முடிவுக்கு வராமல் தொடர்வதற்கு காரணம்.

கபாலிக்கு பின் ரஜினிகாந்த் - ரஞ்சித் கூட்டணியில் தயாராகி உள்ள காலா ஏப்ரல் 27 அன்று ரீலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அப்படத்தின் பெரும்பான்மையான ஏரியாக்களின் வியாபாரம் விலை பேச தொடங்கவில்லை.

இன்னொரு பக்கம் படங்களை திரையிடும் டிஜிட்டல் நிறுவனங்களை நோக்கி விளம்பர நிறுவனங்கள் படையெடுக்கத் தொடங்கின. படம் தொடங்குவதற்கு முன்பும், இடைவேளை நேரத்திலும் திரையிடப்படும் விளம்பரங்களில் நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்யும் இந்தியாவின் முண்ணனி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் ஒப்பந்தங்களை போட முன் வந்துள்ளன. இதில் அரசுவங்கி, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் ஆர்வம் காட்டுவதற்கு காரணம் அதிகளவு தியேட்டர்களில் காலா ரீலீஸ் ஆகும் அதே போல் அதிக பார்வையாளர்களை விளம்பரங்கள் சென்றடையும் என்பதால்தான். இது மாதிரியான வாய்ப்புகள் அரிதாகவே கிடைக்கும் என்பதால் குறிப்பிட்ட கால அளவு திரையிடப்படும் நேரத்தில் தங்கள் விளம்பரங்கள் இடம் பெற வேண்டும் என்பதில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன என்கிறனர்.

காலா பட வியாபாரத்தை காட்டிலும் அப்படம் வெளியிடப்படும் திரையரங்குகளில் அதிக விளம்பர ஒப்பந்தங்கள் பேசிமுடிக்கப்பட்டுள்ளன. தமிழ் சினிமாவில் வேறு எந்த ஹீரோ படங்களுக்கும் இது மாதிரியான விளம்பரம் மூலம் பணம் குவிந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources revealed that many consumer brands have approached digital service providers to add their advertisements in Rajinikanth's Kaala movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X