»   »  தள்ளிப் போகுது காலா ரிலீஸ்? #KaalaMovie rajinikanth

தள்ளிப் போகுது காலா ரிலீஸ்? #KaalaMovie rajinikanth

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினியின் அரசியலா காலா டீசர்?- வீடியோ

தமிழ்த் திரையுலகில் அவ்வப்போது ஸ்டிரைக், புதுப்படங்களின் வெளியீடு இல்லை என தடாலடி சம்பவங்கள் நடப்பதும், பின் சுமூமாவதும் தொடர்கிறது.

க்யூப் உடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சரிவர முடிவு எட்டப்படாததால் மார்ச் 1 முதல் புதுப்படங்களின் வெளியீடு இல்லை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்து நடைமுறைப்படுத்தியும்விட்டது.

Kaala once again postpone?

அதன்படி கடந்த 1 ஆம் தேதி முதல் தமிழ் திரைப்படங்களின் வெளியீடு எதுவும் இல்லாமல் திரையரங்குகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

இந்நிலையில் மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக வரும் 16 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளை மூடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல படப்பிடிப்புகளும் நிறுத்தப்படுகின்றன.

இதனால் ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா, அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவுப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources say that Rajinikanth's April 27th scheduled Kaala may be postponed due to cinema strike.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil