»   »  "ஆண்டவன் உத்தரவு கொடுத்தால்..." - ராகவேந்திரா மண்டபத்துக்கு வெளியே காலா ரஜினி!

"ஆண்டவன் உத்தரவு கொடுத்தால்..." - ராகவேந்திரா மண்டபத்துக்கு வெளியே காலா ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ராகவேந்திரா மண்டபத்துக்கு வெளியே காலா ரஜினி!- வீடியோ

சென்னை : ரஜினிகாந்த், தனது ரசிகர்களை நான்காவது நாளாக ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து உரையாற்றி அவர்களோடு புகைப்படம் எடுத்து வருகிறார்.

அதன்படி இன்று, கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் மாவட்ட ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். அவர்கள் மத்தியில் பேசி, புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார் ரஜினி.

ரஜினிகாந்த் கடந்த மே மாதம் தனது ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இப்போது இரண்டாவது கட்டமாக தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு வருகிறார்.

ரஜினி சந்திப்பு

ரஜினி சந்திப்பு

ரஜினியை சந்திக்க அழைக்கப்பட்டிருக்கும் ரசிகர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து ரசிகர்களும் வரிசையாக வந்து ரஜினியோடு இன்று புகைப்படம் எடுத்து வருகிறார்கள்.

கடவுள் ரஜினி

கடவுள் ரஜினி

ரஜினிகாந்தின் வெறித்தனமான ரசிகர்கள் பலர் அவரைச் சந்தித்து வருகின்றனர். நேற்று முகத்தில் ரஜினி உருவத்தை வரைந்த ரசிகர் ஒருவரும் ரஜினியை சந்தித்தார். அதற்கு முன்தினம் ஒரு ரசிகர் ரஜினியை கடவுளை சுற்றுவதைப் போல சுற்றி வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ரஜினி உருவம்

ரஜினி உருவம்

நேற்றைய ரசிகர்கள் சந்திப்பில் நெற்றி உள்ளிட்ட இடங்களில் ரஜினி பெயரை பச்சை குத்தியிருக்கும் ரசிகர் ஒருவர் ரஜினியைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவர் முகத்தில் 'காலா' ரஜினி உருவத்தை வரைந்திருந்தார். அவர் ரஜினி படங்கள் ப்ரின்ட் செய்யப்பட்ட சட்டையை அணிந்திருந்தார்.

காலா ரஜினி

காலா ரஜினி

இன்று ராகவேந்திரா மண்டபத்துக்கு வெளியே 'காலா' ரஜினியைப் போலவே ஒரு மனிதர் நின்றுகொண்டிருந்தார். ரஜினி ரசிகர்கள் பலரும் அவரை ஆச்சரியமாகப் பார்த்து அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

ரஜினியின் நகல்

ரஜினியின் நகல்

'காலா' படத்தில் ரஜினியின் கெட்டப்பை போலவே அப்படியே அவரது நகலாக இருக்கிறார் . கூலிங் கிளாஸ், கருப்பு சட்டை, கருப்பு - வெள்ளை தாடி, ரஜினி ஹேர்ஸ்டைல், கழுத்தில் ருத்ராட்சம் என காலா ரஜினியை பிரதியெடுத்திருக்கும் இந்த ரசிகர் ரஜினியை சந்திக்க வந்திருக்கிறார்.

ஆண்டவன் உத்தரவு கொடுத்தால்

ஆண்டவன் உத்தரவு கொடுத்தால்

ஆண்டவன் உத்தரவு கொடுத்தால் தானும் அரசியலுக்கு வருவேன் எனச் சொல்லியிருக்கிறார் இந்த ரசிகர். ரஜினி வருகிறாரோ இல்லையோ, அவரது ரசிகர்கள் அரசியலில் குதிக்க தயாராகத்தான் இருக்கிறார்கள்.

English summary
Rajinikanth meets his fans at Raghavendra mandapam. At this scenario, A Rajini fan look alike kaala rajini at near Raghavendra mandapam. Superstar Fans wondered and take selfie with him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X