»   »  'மெர்சல்' டீசருக்கு முன்பு தோற்றுப்போன 'காலா'.. நின்று விளையாடும் விஜய்!

'மெர்சல்' டீசருக்கு முன்பு தோற்றுப்போன 'காலா'.. நின்று விளையாடும் விஜய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
காலா டீஸர் பற்றிய ஒரு அலசல் : #kaalateaser

சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'காலா' டீசர் நேற்று முன்தினம் நள்ளிரவு வெளியிடப்பட்டது.

இந்த டீசர் யூ-ட்யூபில் புதிய சாதனைகள் படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரஜினி ரசிகர்களும், 'காலா' டீசரை ட்ரெண்ட் ஆக்கினர்.

ஆனால், 24 மணி நேரமாகியும், 'காலா' படத்தின் டீசர் மெர்சல் பட டீசரின் சாதனைகளை மிஞ்ச முடியவில்லை. இது சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமே.

காலா டீசர்

காலா டீசர்

காலா டீசர் டீசர் வெளியான சில மணி நேரங்களிலேயே பெரிய சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென நள்ளிரவில் வெளியானதால் பலருக்கும் அந்த நேரத்தில் டீசர் வெளியானது தெரியவில்லை.

முறியடிக்க முடியவில்லை

முறியடிக்க முடியவில்லை

காலா டீசர் வெளியானால் அது மெர்சல் டீசரின் சாதனையை சில மணி நேரங்களிலேயே முறியடிக்கும் என அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், 24 மணி நேரம் கடந்த பின்னும் மெர்சல் சாதனையை காலா டீசரால் முறியடிக்க முடியவில்லை.

லைக்ஸ்

லைக்ஸ்

காலா டீசர் 24 மணி நேரத்தில் 87 லட்சம் பார்வைகளும், 3 லட்சத்து 29 ஆயிரம் லைக்குகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், மெர்சல் டீசர் அதே 24 மணி நேரத்தில் 1 கோடியே 12 லட்சம் பார்வைகளும், 7,28,000 லைக்குகளும் பெற்றது.

மெர்சல் தான் டாப்

மெர்சல் தான் டாப்

காலா டீசரை திட்டமிட்டபடி காலை 10 மணிக்கு வெளியிட்டிருந்தால் மெர்சல் சாதனை முறியடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், காலா டீசர் லீக் ஆனதால் வேறு வழியில்லாமல் தனுஷ் நள்ளிரவில் டீசரை வெளியிட்டதால் சாதனைகளை எட்ட முடியவில்லை.

அஜித் - விஜய் போட்டி

அஜித் - விஜய் போட்டி

இதனை விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். ரஜினி - கமல் என்றிருந்த காலம் போய், தற்போது விஜய் - அஜித் என்ற போட்டி நிலவி வருகிறது.
இந்த இரு நடிகர்களும் டீசர், டிரைலர் தான் புதிய சாதனைகளை மாறி மாறிப் பெற்று வருகிறது.

English summary
'Kaala' teaser didn't overtake 'Mersal' teaser records. Kaala got only 8.7 million views and 329K likes within 24 hours.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil