»   »  'காலா' டீசர் ரிலீஸ், ஆடியோ லாஞ்ச் எப்போ? கசியும் தகவல்கள்!

'காலா' டீசர் ரிலீஸ், ஆடியோ லாஞ்ச் எப்போ? கசியும் தகவல்கள்!

By Vignesh Selvaraj
Subscribe to Oneindia Tamil
காலா' டீசர் ரிலீஸ், ஆடியோ லாஞ்ச் எப்போ?

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் மற்ற பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதன்படி, 'காலா' படத்தின் டீசர் மார்ச் மாதம் 10-ம் தேதி வாக்கிலும், இசை வெளியீடு மார்ச் மாத இறுதியிலும் வெளியிடப்படலாம் என தகவல்கள் கசிந்து வருகின்றன.

காலா

காலா

கபாலியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் 'காலா'. மும்பை தாராவி பகுதியில் வாழும் தமிழர்களின் காட் ஃபாதராக இந்தப் படத்தில் நடித்துள்ளார் ரஜினி. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நட்சத்திரப் பட்டாளம்

நட்சத்திரப் பட்டாளம்

தனுஷ் தயாரிக்க, லைகா நிறுவனம் வெளியிடும் இந்தப் படத்தில், நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், 'வத்திகுச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், ஈஸ்வரிராவ், அருந்ததி, சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

2.ஓ ரிலீஸுக்கு பதிலாக

2.ஓ ரிலீஸுக்கு பதிலாக

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிந்து விட்டபோதும், '2.O' படத்திற்காக காலா படத்தின் ரிலீஸை தள்ளி வைத்தனர். அதனால் காலா டீசர் வெளியீட்டையும் தள்ளி வைத்திருந்தனர். தற்போது '2.O' தள்ளிப் போனதால், அந்தப் படம் வெளியாகயிருந்த ஏப்ரல் 27--ம் தேதி 'காலா' திரைக்கு வருகிறது.

காலா டீசர்

காலா டீசர்

'காலா' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி மற்றும் பாடல்கள் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மார்ச் 10-ம் தேதி டீசர் வெளியீடும், மார்ச் மாத இறுதியில் ஆடியோ ரிலீஸும் செய்யத் திட்டமிட்டுள்ளனராம். வெகு விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Rajinikanth's 'Kaala' directed by Ranjith will be released on April 27 is officially announced. In this situation, other works of the film have been stepped up. Teaser and Trailer works has come to an end. Accordingly, the teaser of 'Kaala' will be released on March 10th.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more