»   »  காலா அப்டேட்: ரஜினி பங்கேற்கும் காட்சிகள் முடிந்தன!

காலா அப்டேட்: ரஜினி பங்கேற்கும் காட்சிகள் முடிந்தன!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காலா படத்தில் ரஜினிகாந்த் பங்கேற்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது.

பா ரஞ்சித் இயக்கி வரும் காலா படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் மும்பையில் தொடங்கியது. அங்கு ஒரு மாதம் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார் ரஜினி.

Kaala update: Rajini completes his portion

பின்னர் சென்னை ஈவிபி பூங்காவில் மும்பை தாராவி செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தினார்கள். அந்த ஷூட்டிங்கிலும் ரஜினிகாந்த் தொடர்ந்து பங்கேற்றார். ரஜினி, சமுத்திரக்கனி, அருள்தாஸ் மற்றும் நாயகிகள் பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டன.

நேற்றுடன் ரஜினி பங்கேற்கும் காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்டன. ரஜினிகாந்த் மிகுந்த நிறைவுடனும் சந்தோஷத்துடனும் காலா படக்குழுவினருக்கு விடை கொடுத்துவிட்டு வீடு திரும்பினார்.

ரஜினி இல்லாத காட்சிகள் இந்த மாத இறுதி வரை இதே ஈவிபி பூங்காவிலும், இன்னும் சில காட்சிகள் மும்பையிலும் படமாக்கப்பட உள்ளது.

English summary
Rajinikanth has completed his portion shooting for Kaala
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil