»   »  தள்ளிப் போகாது... அறிவித்தபடி ரிலீசாகிறது காலா! #Kaala

தள்ளிப் போகாது... அறிவித்தபடி ரிலீசாகிறது காலா! #Kaala

Posted By:
Subscribe to Oneindia Tamil
அறிவித்தபடி ரிலீசாகிறது காலா- வீடியோ

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திட்டமிட்டபடி தடைகள் கடந்து ஏப்ரல் இறுதியில் ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர் தனுஷ் தரப்பில் இருந்து விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த நான்கு வாரங்களாக புதிய படங்கள் ரீலீஸ் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மார்ச் 16முதல் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டு வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. இதனால் மார்ச் மாதம் ரீலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த 30க்கும் மேற்பட்ட படங்கள் முடங்கி உள்ளன.

Kaala will be released on scheduled date

வேலை நிறுத்தம் முடிந்த பின் ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்ட படங்கள் ரீலீஸ் செய்த பின்னரே பிற படங்கள் வெளியிட அனுமதிக்கப்படும் என சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதனால் புதிய படங்கள் தணிக்கைச் சான்றிதழ் பெற தடையில்லா சான்று, மற்றும் விளம்பர ஒப்புதல் கடிதம் இரண்டும் வழங்குவதை நிறுத்தி வைத்திருந்தனர்.


ஏப்ரல் 27 அன்று ரீலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்த ரஜினி நடித்திருக்கும் காலா படத்துக்கு இச்சான்றிதழ் வழங்க தயாரிப்பாளர்கள் சங்கம் மறுத்து வந்தது.


இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் ரஜினி, மற்றும் தனுஷ் இருவரது தயாரிப்பு நிறுவனமும் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.


காலா படத்தை தணிக்கை சான்றிதழ் பெற தேவையான அனுமதி கடிதங்களை வர்த்தக சபையிலிருந்து நேற்று தனுஷ் நிறுவனத்தின் பெயரில் பெறப்பட்டுள்ளது.

English summary
South Indian Film Chamber has approved to release Rajinikanth's Kaala movie as per the scheduled date.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X