Bison: சாமி ஆட்டம் ஆடும் துருவ் விக்ரம்.. காளைமாடன் கானம் கலக்குதே!
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பைசன். இந்த படத்தை இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரெடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதாவது, அக்டோபர் 9ஆம் தேதி படத்தில் இருந்து காளைமாடன் கானம் என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டுள்ள பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் காளை மாடன் கானம் பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பாடல் வெளியாகி சில மணி நேரங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக இணையவாசிகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பாடல் வரிகளை மாரி செல்வராஜ் எழுதி உள்ளார்.

மேலும் பாடலுக்கான மான்டேஜ் விசுவல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக துருவ் விக்ரம் கிராமத்து கோவில் திருவிழாக்களில் மாலைகளில் மாராப்பு அணிந்து கொண்டு கையில் தீப்பந்தத்துடன் ஆடும் ஆட்டம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. பாடலைப் பார்த்த ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இது அல்லவோ பாடல்: இணையவாசிகள், " படத்தில் புல்லரிக்கும் காட்சிகள் அதிகம் இருக்கும் என்பது தெளிவாக புரிகிறது. தயாரிப்பாளர் பா ரஞ்சித், இயக்குனர் மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் ஆகியோருக்கு வாழ்த்துகள் என்றும், எவன் சொன்னது கன்னட படங்கள் போல் தமிழ் படங்களின் தரம் இல்லையென்று. இந்த ஒரு பாடல் போதும், நம் கலை, பாரம்பரியம், இறை நம்பிக்கை என்னவென்று. எத்தனை காந்தாரா வந்தாலும் இப்படி சிலிர்க்க வைக்க முடியாது என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

ரசிகர்கள் அப்லாஸ்: அதேபோல் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவை பாராட்டும் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது. ரசிகர் ஒருவர், " இசை நாயகன் நிவாஸ் K பிரசன்னா வேற லெவல் நீங்க தல. அனைத்து பாடல்களும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது என்னுடைய வாழ்த்துகள் என்றும், பாடல் வரி என்ன என்று கூடத்தெரியாமல் இசையை போட்டு குழப்பி அடிக்கும் பாடல்கள் இடையே வரிகளை ரசிக்க வைத்த இசை குழுவுக்கு நன்றி என்றும், அருமை, ரொம்ப நாளைக்கு அப்புறம் தென்னாட்டு கிராமத்து இசை... பட்டைய கிளப்பியிடுச்சி...கேட்கிற அனைவரையும் ஆட்டம் போட வைக்கும் அருமை" என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.
பாராட்டு: பாடலின் மான்டேஜ் காட்சிகளை தனியாக பாராட்டலாம். பாடலின் மெட்டு, அதன் வரிகளுக்கு ஏற்றதை போல சாண்டி மாஸ்டரின் நடனமும் அமைந்துள்ளது. துருவ் விக்ரமிற்கு வைக்கப்பட்டுள்ள சில க்ளோசப் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. மொத்தத்தில் பாடல் பலதரப்பட்ட ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகும் ஐந்தாவது படம் ஆகும். அதேபோல் துருவ் விக்ரமுக்கு இந்த படம் மூன்றாவது படம். படத்தின் டிரைலர் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











