அடேங்கப்பா.. பேசிப்பேசியே வில்லன்களையும், அடியாட்களையும் அழ வச்சிட்டாரே.. என்ன படம் டா சாமி!

சென்னை: சினிமாவில் பொதுவாக ஹீரோவுக்கு முன்பாக துப்பாக்கி வைக்கும் போது வில்லன்கள் தேவையில்லாத வசனங்கள் பேசும் கேப்பில் ஹீரோ எஸ்கேப் ஆகி அவரை போட்டுத் தள்ளுவார்.

அதுபோன்ற காட்சிகளை தான் காலம் காலமாக பார்த்திருப்போம். ஆனால், அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு பேசியே வில்லனை அழ வைத்த காட்சி ஒன்று சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

இந்த ஆண்டு வெளியான காலங்களில் அவள் வசந்தம் படக் காட்சியை பார்த்து சிரிக்க முடியாமல் ரசிகர்கள் சிரித்து அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

க்ரிஞ்ச் காட்சிகள்

க்ரிஞ்ச் காட்சிகள்

சமூக வலைதளங்களில் அடிக்கடி இதுபோன்ற க்ரிஞ்ச் காட்சிகள் சினிமாவில் இருந்தும், சில சீரியல்களில் இருந்தும் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை உடனடியாக கவர்ந்து விடும். லாஜிக் இல்லா மேஜிக் போல இந்த காட்சிகள் சொதப்பினாலும், டிரெண்டாகி ரசிகர்களை ஒரு முறையாவது பார்க்க செய்து விடும். அதுபோன்ற ஒரு காட்சி தான் தற்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.

துப்பாக்கி முனையில் ஹீரோ

துப்பாக்கி முனையில் ஹீரோ

வில்லனிடம் சிக்கிக் கொண்ட ஹீரோவின் உயிர் துப்பாக்கி முனையில் போக உள்ள நிலையில், அந்த ஹீரோ பேசும் காட்சி தான் ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறது. வில்லனிடம் மாட்டிக் கொண்டு சாகப் போகும் நிலையில், அங்கிருந்து தப்பித்து வில்லன் ஆட்களை ஹீரோ துவம்சம் செய்வார் என்று பார்த்தால் ஒரே ஒரு கடைசி ஆசை பாஸ் என அவர் போனில் பேசும் காட்சிகள் ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளது.

கடைசி ஆசை

கடைசி ஆசை

சுட்டு சாகடிக்கப் போகும் வில்லனிடம் ஒரே ஒரு கடைசி ஆசை எனக் கூறி விட்டு தனது காதலிக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார் ஹீரோ. அதில், நீ சாகுற வரைக்கும் உன்னை தனியா தவிக்கவிட்டுட்டு போகப் போறேன்னு நினைக்கிறப்போ ரொம்ப கஷ்டமா இருக்கு.. அதுக்காக உன்கிட்ட ஸாரி கேட்டுக்கிறேன். இதுவரை நீ என் கூட இருந்ததற்கு தேங்ஸ் சொல்லிக்கிறேன் என உருக உருக பேசுகிறார் ஹீரோ.

கதறி அழும் வில்லன்

கதறி அழும் வில்லன்

ஹீரோவை சுட்டு சாகடிக்க வந்த வில்லன் அவர் வாய்ஸ் மெசேஜ் போடவும், அதை கேட்டுக் கொண்டு ஹீரோயின் ஒரு பக்கம் அழும் காட்சிகள் இடம்பெற்ற நிலையில், அந்த துப்பாக்கியில் கடைசியாக ஒரு பட்டாம்பூச்சி வந்து அமர்வதை பார்த்ததும் வில்லன் ஹீரோவை சுடாமல் அவர் காதல் கதையை கேட்டு கண் கலங்கி கதறி அழுகிறார்.

அடியாட்களும் அழறாங்க

அடியாட்களும் அழறாங்க

வில்லனே அழும் போதும் அவர் கூட இருக்கும் அடியாட்கள் அழ மாட்டார்களா என்ன? அவர்களும் தேம்பி தேம்பி அழும் காட்சிகளை சீரியலில் ஒவ்வொரு நடிகருக்கும் க்ளோஸ் அப் காட்சிகள் வைத்து ஓட்டுவதை போல கிளைமேக்ஸை ஓட்டி உள்ளனர்.

காலங்களில் அவள் வசந்தம்

காலங்களில் அவள் வசந்தம்

இந்த ஆண்டு வெளியான காலங்களில் அவள் வசந்தம் திரைப்படத்தில் தான் இப்படியொரு பிரம்மிக்க வைக்கும் கிளைமேக்ஸ் காட்சி இடம்பெற்றுள்ளது என நெட்டிசன்கள் அதிகமாக ஷேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர். இயக்குநர் ராகவ் மிர்தத் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் நாயகனாக கெளசிக் நடித்துள்ளார். ஹீரோயினாக அஞ்சலி நாயர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X