காத்துவாக்குல ரெண்டு காதல்…டிசம்பரில் படப்பிடிப்பு ஆரம்பம் !

சென்னை : காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் இறுதியில் தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் கதாபாத்திரத்தை சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்தார். பின்னர் சில சிக்கல் காரணமாக விஜய்சேதுபதிக்கு கைமாறியது என்பது குறிப்பிடத்தக்கது

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

ரொமான்ஸ்-காமெடி கதைக்களமாக படம் உருவாகி உள்ளது. ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த நானும் ரவுடி தான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த காம்போ மீண்டும் இணையும் நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வெற்றிப்படமாக இருக்கும்

வெற்றிப்படமாக இருக்கும்

நானும் ரௌடி தான் படத்தில் பணியாற்றிய போது தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் காதலர்களாக மாறினர் என்பது அனைவருக்கும் தெரியும். விக்னேஷ் இயக்கத்தில் மீண்டும் நயன்தாரா நடிப்பதால் இந்த படமும் நிச்சயம் ஒரு வெற்றிப்படமாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

படப்பிடிப்பு தொடங்கவில்லை

படப்பிடிப்பு தொடங்கவில்லை

காத்து வாக்குல ரெண்டு காதல் படம் அறிவிக்கப்பட்டு பல மாதங்களுக்கு மேல் ஆகியும் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்தன. படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டவுடனே கொரோனா லாக்டவுன் தொடங்கியதால் படப்பிடிப்பை நடத்த முடியாமல் போது. ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனாவின் தாக்கம் கு றையாததால் படப்பிடிப்பை நடத்த முடியாமல் போனது.

டிசம்பரில் ஆரம்பம்

டிசம்பரில் ஆரம்பம்

தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் இறுதியில் தொடங்கும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X