5 மணி நேரத்தில் காத்துவாக்குல இன்டர்நெட்டில் லீக்கான KRK...இதெல்லாம் கேட்க மாட்டீங்களா?

சென்னை : தியேட்டரில் ரிலீசான வெறும் 5 மணி நேரத்திற்குள் காத்துவாக்குல ரெண்டு காதல் முழு படமும் இன்டர்நெட்டில் லீக்காகி உள்ளது. என்ன இவ்வளவு ஃபாஸ்டா இருக்காங்க என அனைவரும் ஆச்சரியப்பட்டு போய் உள்ளனர்.

டைரக்டர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல். ரொமான்டிக் காமெடி படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ரிலீஸ் செய்யப்பட்டது.

எதிர்பார்ப்பிற்கு காரணம்

எதிர்பார்ப்பிற்கு காரணம்

2022ல் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. அதற்கு காரணம் நானும் ரெளடி தான் படத்திற்கு பிறகு காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம். அதுவும் சமந்தா, விஜய் சேதுபதி நடித்துள்ள படம் என்பது மட்டுமல்ல. டைரக்டர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதும் தான்.

கேஆர்கே எப்படி இருக்கு

கேஆர்கே எப்படி இருக்கு

2015 ம் ஆண்டே கதை தயாரிக்கப்பட்டு, 2016ல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, 2020 ல் படத்தின் டைட்டிலை அறிவித்து, கிட்டதட்ட 7 ஆண்டுகள் காத்திருப்பு மற்றும் உழைப்பிற்கு பிறகு இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. பல முறை தள்ளி வைக்கப்பட்டு இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. பெரும்பாலானவர்கள் சுமார், பார்க்கலாம் என்ற அளவில் தான் விமர்சனம் வழங்கி உள்ளனர்.

பைரசியில் லீக்கான கேஆர்கே

பைரசியில் லீக்கான கேஆர்கே

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. இந்த படத்தின் ரன்னிங் டைம் 159 நிமிடங்கள். ஆனால் படம் தியேட்டரில் ரிலீசான வெறும் 5 மணி நேரத்தில் இன்டர்நெட்டில் முழு படமும் வெளியிடப்பட்டு விட்டது. 7 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட படத்தை 7 மணி நேரம் கூட ஆவதற்குள் இன்டர்நெட்டில் ரிலீஸ் செய்துள்ளார்கள்.

யப்பா...என்ன ஃபாஸ்ட்

யப்பா...என்ன ஃபாஸ்ட்

முன்பெல்லாம் படம் தியேட்டரில் ரிலீசானதும் இன்டர்நெட்டில் வெளியானது மிக அரிதாக நடந்து வந்தது. அதுவும் பெரிய நடிகர்கள் படங்களுக்கு தான் இது அதிகம் நடந்து வந்தது. ஆனால் இப்போதெல்லாம் யாருடைய படம் இன்டர்நெட்டில் லீக்காகிறது என்பது கேள்வியே இல்லை. எந்த படம் எத்தனை மணி நேரத்தில் லீக் ஆகிறது என்பது தான் கேள்வியே. அண்ணாத்த முதல் ஆர்ஆர்ஆர், வலிமை, பீஸ்ட் என அத்தனை படங்களும் தியேட்டரில் வெளியான 24 மணி நேரத்திற்குள் இன்டர்நெட்டில் வந்து விடுகிறது.

இதெல்லாம் கேட்க மாட்டீங்களா

இதெல்லாம் கேட்க மாட்டீங்களா

தமிழ் சினிமாவில் ஓடிடி ரிலீசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓடிடியில் வெளியிடப்பட்ட படங்களை தியேட்டர்களில் வெளியிட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஓடிடி என்பது தொழில்நுட்ப வளர்ச்சியின் இன்னொரு பரிமாணம் என்பது புரிந்து கொண்டு, ஏற்கன மனமில்லாதவர்கள், இப்படி திருட்டுதனமாக புதிய படங்கள் இன்டர்நெடில் வெளியாவது பற்றி இதுவரை பேசவே இல்லை. படங்கள் சரியில்லை, கதை சரியில்லை, தமிழ் சினிமா வளர வேண்டும் என யூட்யூப், டிவி சேனல் என பேட்டி அளிப்பவர்களும் கூட இந்த விஷயம் பற்றி பேசுவதில்லை.

விஷால் போராட்டம் என்னாச்சு

விஷால் போராட்டம் என்னாச்சு

பல காலமாக தொடர்ந்து வரும் இந்த பிரச்சனை பற்றி திரைத்துறையை சேர்ந்த யாரும் இதுவரை வாய் திறக்கவோ, அதை தடுக்க முயற்சி எடுக்காமல் இருப்பதும் மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. பைரசிகளுக்கு எதிராக விஷால் போராட்டம் வரை போனார். ஆனால் அதற்கு பிறகு அந்த போராட்டம் என்ன ஆனது. எந்த காரணத்தினால் இப்போது வரை அது பற்றி யாரும் பேசுவதில்லை என யாருக்கும் தெரியாது.

Recommended Video

#KRK Kaathuvaakula Rendu Kaadhal Public Opinion | Filmibeat Tamil

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X