twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இப்ப கூடவா?: நல்ல காரியம் செய்து விமர்சனத்திற்குள்ளான காற்றின்மொழி படக்குழு

    By Siva
    |

    சென்னை: நல்ல காரியம் செய்த காற்றின் மொழி படக்குழு விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

    ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான காற்றின் மொழி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக அது அமைந்துள்ளது.

    ஜோதிகா இதுவரை நடித்த படங்களிலேயே இதில் தான் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

    நிவாரணம்

    நிவாரணம்

    கஜா புயலால் பாதிக்கப்பட்டு வாடும் மக்களுக்கு உதவ முன்வந்துள்ளது காற்றின் மொழி படக்குழு. அதாவது தமிழகத்தில் விற்பனையாகும் ஒவ்வொரு காற்றின் மொழி டிக்கெட் வருமானத்தில் இருந்து தயாரிப்பாளரின் பங்கில் ரூ.2 தமிழக அரசின் கஜா புயல் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது நல்ல விஷயம்.

    உதவி

    உதவி

    வாழ்வாதாரத்தை இழந்து வாடும் டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ள காற்றின் மொழி படக்குழுவை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். சிறு பட்ஜெட் படம் என்றாலும் அதில் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை தானம் செய்கிறார்கள். இதன் மூலம் அவர்களின் நல்ல மனம் தெரிகிறது.

    விளம்பரம்

    விளம்பரம்

    காற்றின் மொழி படத்தை பார்த்து நீங்கள் ரூ. 2 கொடுப்பதற்கு பதில் நாங்களே நேரடியாக அந்த பணத்தை நிவாரண நிதிக்கு அளித்துவிடுவோமே என்று படக்குழுவின் அறிக்கையை பார்த்த பலர் தெரிவித்துள்ளனர். இந்த துயர நேரத்தில் கூடவா விளம்பரம் தேடுவீர்கள் என்று படக்குழுவை சாடியுள்ளனர்.

    ஜோதிகா

    ஜோதிகா

    நல்லது செய்யும்போது அத்துடன் சேர்ந்து விளம்பரம் தேடுகிறார்கள் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. படக்குழு செய்ததிலும் தவறு இல்லை, மக்கள் விமர்சிப்பதிலும் தவறு சொல்வதற்கு இல்லை.

    English summary
    People criticise Kaatrin Mozhi team after seeing their announcement about donating for Gaja cyclone relief fund.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X