twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புதிய முறையில் விநியோகிக்கப்படும் காவியத் தலைவன்

    By Shankar
    |

    வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள காவியத் தலைவன் படத்தை புதிய முறையில் விநியோகம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    வழக்கமாக தமிழ்ப் படங்களை மினிமம் கேரண்டி முறையிலோ அல்லது பர்சன்டேஜ் அடிப்படையிலோ விநியோகிப்பார்கள்.

    ஆனால் காவியத் தலைவன் படத்தை இந்த முறைகளில் விநியோகிக்காமல், 'திருப்பித் தராத முன்பணம்' என்ற வகையில் ஒரு தொகையைப் பெற்றுக் கொண்டு விநியோகிக்கின்றனர். இந்த முன்பணத் தொகையைத் தாண்டி படத்தின் வசூல் இருந்தால், அந்தத் தொகையை இரு தரப்பும் சமமாகப் பிரித்துக் கொள்வார்கள்.

    Kaaviya Thalaivan distributed in new method

    இந்த முறையால் இரு தரப்புக்குமே லாபம் என்பதால், மதுரை மற்றும் திருச்சி ஏரியா விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கியுள்ளனர்.

    மினிமம் கேரண்டி முறையில் விநியோகஸ்தர்கள் அதிக பணம் செலுத்த வேண்டி வந்தது. இந்த திருப்பித் தராத முன்பணம் முறையில் அந்த அளவு பணம் செலுத்த வேண்டியதில்லை என்பதால் இந்த முறைக்கு அதிக வரவேற்பு இருக்கும் என நம்புகின்றனர்.

    ட்ரீம் பேக்டரி என்ற புதிய அமைப்பைத் தொடங்கி இந்த புதிய முறை விநியோகத்தை ஆரம்பித்துள்ளனர் சிவி குமார், ஸ்டுடியோ கிரீன் பிரபு உள்ளிட்டோர்.

    காவியத் தலைவன் படத்தில் சித்தார்த், வேதிகா, ப்ருத்விராஜ் நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இம்மாதம் 28-ம் தேதி படம் வெளியாகிறது.

    English summary
    The Producers Consortium- Dream Factory which is set up for Marketing and Distribution by CV Kumar, Studio Green’s Prabhu and others are marketing Kaaviya Thalaivan in Tamil Nadu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X