»   »  ஜஸ்ட் 11 நாட்களில் ரூ 500 கோடியைக் குவித்த முதல் இந்தியப் படம் கபாலி!

ஜஸ்ட் 11 நாட்களில் ரூ 500 கோடியைக் குவித்த முதல் இந்தியப் படம் கபாலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெளியான பதினோரு நாட்களில் ரூ 500கோடியை கபாலி திரைப்படம் வசூலித்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால், இந்திய அளவில் இந்த சாதனையை குறுகிய காலத்தில் செய்த ஒரே படம் என்ற பெருமை ரஜினியின் கபாலிக்குக் கிடைக்கும்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி எக்கச்சக்க சாதனைகளைப் படைத்து வருகிறது. குறிப்பாக வசூலில் கபாலிக்கு அருகில்கூட எந்தப் படமும் வரமுடியாத நிலை. இதனால் கோடிகள் என்பதே சர்வசாதாரண வார்த்தையாகிவிட்டது மீடியாவில்.

Kabali in 500 cr club: Just like that beats Bahubali and PK

சில தேசிய நாளிதழ்களில் கபாலி ஏற்கெனவே ரூ 700 கோடியைக் குவித்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. ரிலீசுக்கு முந்தைய வர்த்தகங்கள், பிராண்டிங், ஸ்பான்சர்கள், தொலைக்காட்சி உரிமை, ஆடியோ விற்பனை மூலம் மட்டும் ரூ 220 கோடி வந்துள்ளதாகவும், திரையரங்குகளில் நேரடி வசூல் மூலம் மட்டுமே ரூ 500 கோடி வந்துள்ளதாகவும் பிடிஐ, The Financial Express போன்றவை செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கு முன்பு ரூ 500 கோடிக்கு மேல் குவித்த இந்தியப் படங்கள் பாகுபலி மற்றும் பிகே. இந்தத் தொகையைக் குவிக்க அவற்றுக்கு கிட்டத்தட்ட 4 வாரங்கள் தேவைப்பட்டன. அதுவும் பிகே சீனாவில் வெளியாகி அந்தத் தொகையும் சேர்ந்த பிறகுதான் பெரிய வசூலைக் குவித்தது.

பாகுபலி கிட்டத்தட்ட ஒரு மாதம் எடுத்துக் கொண்டது.

கடந்த மாதம் வெளியான சுல்தான் படம் இன்னும் ரூ 500 கோடி க்ளப்புக்குள் நுழையவில்லை. ரூ 490 கோடியை அந்தப் படம் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்து வரும் ரஜினியின் 2.ஓ தவிர வேறு எந்தத் தமிழ்ப் படமும் இப்படி ஒரு வசூலை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என்பதே உண்மை.

இந்த நிலையில் நேற்றுடன் கபாலி ரூ 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. வார நாட்களிலும் 60 சதவீதத்துக்கு மேல் ரசிகர் கூட்டம் குவிவதால், கபாலியின் சாதனைகள் மேலும் தொடரும் என்று தெரிகிறது. குறிப்பாக வரும் வார இறுதி முக்கியமானது. அந்த மூன்று நாட்களிலும் கபாலி ஹவுஸ்ஃபுல்லாக ஓடினால், இந்திய அளவில் எந்தப் படமும் நினைத்துப் பார்க்காத வசூல் கபாலிக்குக் கிடைக்கும் என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வல்லுநர்கள்.

English summary
Rajinikanth's biggest blockbuster Kabali is so for collected Rs 500 cr plus in just 11 days and beat Bahubali and PK.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil