»   »  சூப்பர் ஸ்டார் இல்லாமல் தீபாவளி தியேட்டரா…? கபாலியும் போட்டியில் உண்டு!

சூப்பர் ஸ்டார் இல்லாமல் தீபாவளி தியேட்டரா…? கபாலியும் போட்டியில் உண்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டாரின் ரசிகனுக்கு தலைவரின் படம் ரிலீஸாகும் நாள்தான் தீபாவளி, பொங்கல் எல்லாமே... சில ஆண்டுகளாகவே ரஜினியின் படங்கள் விசேஷ நாட்களுக்கு ரிலீஸ் செய்யப்படுவதில்லை. மற்ற படங்கள் பாதிக்கப்படும் என்ற எண்ணத்தில் ரஜினியே அதை விரும்புவதில்லை. ஆனால் இந்த தீபாவளிக்கு ரஜினியின் கபாலி மீண்டும் சில அரங்குகளில் திரையிடப்பட உள்ளது.

ஏற்கெனவே கபாலி திரையிடப்பட்ட சில அரங்குகளில் தீபாவளியன்று காலை 9 மணி தொடங்கி சிறப்புக் காட்சிகளாக கபாலி திரையிடப்படுகிறது. தீபாவளி படங்களின் ரிசர்வேஷனுக்கு நிகராக இந்த காட்சிகளுக்கும் டிக்கெட் புக்கிங் அமோகமாக நடக்கிறதாம்.


Kabali also in Deepavali race!

இந்த தீபாவளிக்கு வரும் படங்கள் குறித்து பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லை. எனவே முக்கிய தியேட்டர்களில் சில, ப்ளாக்பஸ்டர் படமான கபாலியையே திரையிடுகிறார்கள்.


தீபாவளியை தலைவருடன் கொண்டாடப்போகிறார்கள் அவரது ரசிகர்கள்!

English summary
Superstar Rajinikanth's Kabali will be back to main screens as Deepavali special.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil