»   »  இணையத்தில் வெளியானது கபாலி பாடல்தானா?

இணையத்தில் வெளியானது கபாலி பாடல்தானா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கபாலி படத்தின் பாடல்கள் லீக் ஆகிவிட்டதாக கடந்த சில நாட்களாக பரபரப்பு கிளம்பியுள்ளது.

ரஜினி நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் ‘கபாலி'. இப்படத்தை ரஞ்சித் இயக்கி வருகிறார். சென்னையில் தொடங்கிய முதற்கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.

அடுத்த கட்டமாக கோவா செல்ல படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்நிலையில் இப்படத்தின் பாடல் ஒன்று இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளதாக பரபரப்பு கிளம்பியது. இது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வீடியோ

வீடியோ

மலேசியாவில் ஒரு பாடல் படமாக்கப்பட்ட போது, அங்குள்ள படப்பிடிப்பில் இருந்து பாடலை பதிவு செய்து இணையத்தில் யாரோ வெளியிட்டு இருக்கிறார்கள்.

வாட்ஸ் ஆப்

வாட்ஸ் ஆப்

2 நிமிடங்கள் அடங்கிய அப்பதிவு வாட்ஸ்-அப் மூலமாக பகிரப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் விசாரித்த போது, வீடியோ ஏதுமில்லை, பாடல் வரிகள்தான் லீக் ஆகின என்றார்கள்.

ரஜினி பாட்டு மாதிரி இல்லையே

ரஜினி பாட்டு மாதிரி இல்லையே

ஆனால் அந்தப் பாடல் வரிகள் ரஜினி படத்தில் வருவது போல இல்லாமல் மிக சாதாரணமான வரிகளாக இருப்பதால், கபாலி பாடல் லீக் என்பதே புரளி என்றும் கூறுகிறார்கள்.

சந்தோஷ் நாராயணன்

சந்தோஷ் நாராயணன்

இப்படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார்.

English summary
Sources say Kabali audio leak news is fake one.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil