»   »  பாகுபலி சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்த கபாலி!

பாகுபலி சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்த கபாலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்தின் மிகப் பெரிய வெற்றிப் படமாக கொண்டாடப்படும் கபாலி, பாகுபலியின் அத்தனை சாதனைகளையும் முறியடித்துள்ளது.

எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பாகுபலி வசூலில் பல சாதனைகள் படைத்தது. இந்த சாதனைகளையெல்லாம் இனி எந்தப் படத்தாலும் முறியடிக்க முடியுமா என்ற கேள்வி விஸ்வரூபமாய் நின்றது, கபாலி வெளியாகும் வரை.


ஆனால் ரஜினி என்ற நடிகரின் தாக்கம் எப்பேர்ப்பட்ட திரையுலக சாதனைகளையும் தகர்க்கும் வல்லமை கொண்டது என்பதை கபாலி புரியவைத்துவிட்டது.


பாகுபலியின் 7 பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை கபாலி முறியடித்துள்ளது. அதுவும் வெளியான பத்தே நாட்களில்...


அமெரிக்காவில் சிறப்புக் காட்சி வசூல்

அமெரிக்காவில் சிறப்புக் காட்சி வசூல்

அமெரிக்காவில் எந்திரன், சிவாஜி போன்ற ரஜினி படங்கள் செய்திருந்த சிறப்புக் காட்சி வசூல் சாதனையை பாகுபலி முறியடித்தது. சிறப்புக் காட்சியில் மட்டும் 1,010,550 டாலர்களை பாகுபலி வசூலித்தது. ஆனால் கபாலி 1.50 மில்லியன் குவித்து பாகுபலியை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது!


உலகளவில் முதல் தென்னிந்திய படம்

உலகளவில் முதல் தென்னிந்திய படம்

சர்வதேச அளவில் படம் வெளியான முதல் நாளில் ரூ 75 கோடிகள் குவித்து மலைக்க வைத்திருந்தது பாகுபலி. அதையும் தகர்த்துவிட்டது கபாலி. முதல் நாளில் மட்டும் சர்வதேச அளவில் ரூ 87.50 கோடிகளை கபாலி குவித்துள்ளது. இந்த வசூலை ஈட்டி முதல் தென்னிந்தியப் படம் கபாலிதான்.


மிக வேகமாக 100 கோடிகளைத் தாண்டிய படம்

மிக வேகமாக 100 கோடிகளைத் தாண்டிய படம்

முதல் நாளில் ரூ 100 கோடி வசூலெல்லாம் சாத்தியமா என்ற கேள்விக்கு பதிலாய் அமைந்துவிட்டது கபாலி. இதற்கு முன் பாகுபலி முதல் இரு தினங்களில் ரூ 135 கோடி குவித்தது. ஆனால் கபாலியோ முதல் நாளிலேயே ரூ 114 கோடிகளை குவித்து பிரமிக்க வைத்தது. முதல் இரு தினங்களில் 155 கோடிகளைக் குவித்தது கபாலி.


முதல் வார முடிவில் அதிக வசூல்

முதல் வார முடிவில் அதிக வசூல்

முதல் வார முடிவில் பாகுபலி வசூலித்தது ரூ 197 கோடி. கபாலி அதையும் காலிபண்ணிவிட்டது. இந்தப் படம் ரூ 219 கோடிகளைக் குவித்துவிட்டது.


வெளிநாடுகளில்...

வெளிநாடுகளில்...

அதேபோல வெளிநாடுகளில் முதல் வார முடிவில் அதிக வசூல் குவித்த படமும் கபாலிதான். பாகுபலி முதல் மூன்று நாட்களில் 4.65 மில்லியன் டாலர்கள் வசூலித்திருந்தது உலகம் முழுவதும். ரஜினியின் கபாலியோ 12 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.


200 கோடி

200 கோடி

மிகக் குறுகிய நாட்களில் 200 கோடியைத் தொட்ட முதல் தென்னிந்தியப் படம் கபாலிதான். 200 கோடி க்ளப்பில் நுழைய பாகுபலிக்கு 5 நாட்கள் தேவைப்பட்டது. ஆனால் கபாலி அதை மூன்றே நாட்களில் முறியடித்தது.


ஆல் டைம் கிரேட் படம்

ஆல் டைம் கிரேட் படம்

சர்வதேச அளவில் பாகுபலி இதுவரை 10.94 மில்லியன் டாலர்கள் சம்பாதித்ததுதான் பெரிய சாதனையாகப் பார்க்கப்பட்டது. ஆனால் கபாலியோ பத்து நாட்களில் 16 மில்லியன் டாலர்கள் வசூலித்து பெரும் சாதனைப் படைத்துள்ளது. இன்னும் சில வாரங்களில் இந்தத் தொகை அதிகரித்து, இந்தியப் படங்கள் எதுவும் தொட முடியாத பெரிய இலக்கை நிர்ணயிக்கும் என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸில்.


மொத்த வசூல்

மொத்த வசூல்

பாகுபலியின் மொத்த வசூல் ரூ 500 கோடிகள். அதாவது அந்தப் படத்தின் ஆயுள்கால வருவாய் அது. ஆனால் கபாலி வெளியான பதினோரு நாட்களில் ரூ 635 கோடிகளைச் சம்பாதித்து இந்திய சினிமாவில் முதலிடத்தில் நிற்கிறது.


English summary
Rajinikanth's Kabali has beaten all Bahubali records in local and international level.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil