»   »  கபாலி... இந்தி, தெலுங்கில் கல்லா கட்டலையாமே?

கபாலி... இந்தி, தெலுங்கில் கல்லா கட்டலையாமே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் திரையுலகில் கபாலி வசூல் சாதனை படைத்து 400 கோடி வரை கல்லாகட்டினாலும் தெலுங்கு மற்றும் இந்தியில் படுதோல்வி அடைந்துள்ளதாக புலம்புகின்றனர் பட விநியோகஸ்தர்கள்.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே நடித்த கபாலி திரைப்படம் இதுவரை வெளியான அத்தனை இந்திய படங்களின் வசூல் சாதனையையும் முறியடித்து வெற்றிநடை போடுவது தமிழ் திரையரங்குகளில் கிடைத்த வருமானத்தால் தான்.


Kabali big flop in other languages

தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் வெளியான கபாலி திரைப்படத்தை விநியோகஸ்தர்கள் பலர் போட்ட பணத்தை திரும்ப எடுக்க முடியாமல் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டிருக்கின்றனராம்.


தெலுங்கில் நிஜாம் பகுதியின் விநியோக உரிமையை வாங்கிய அபிஷேக் பிச்சர்ஸ் நிறுவனத்தைத் தவிர மற்ற அனைத்து விநியோகஸ்தர்களும் லாபத்தை எட்ட வாய்ப்பே இல்லாத அளவிற்கு படத்திற்கு வரவேற்பு குறைந்துவிட்டதாக நொந்து புலம்புகின்றனராம்.


எப்படியோ அதிர்ஷ்டத்தினால் அபிஷேக் பிச்சர்ஸ் நிறுவனம் மட்டும் சிறிய லாபத்துடன் முதலுக்கே மோசமாகாமல் தப்பித்துள்ளது.


படத்தின் விநியோக உரிமையுடன் சேட்டிலைட் ஒளிபரப்பு உரிமையையும் 30 கோடி ரூபாய்க்கு வாங்கிய புதிய விநியோகஸ்தர்களான கே.பி.சவுத்ரி, ப்ரவீன் வர்மா போன்ற பலர் இழப்பை ஈடுகட்ட வழி தெரியாமல் விழிபிதுக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

English summary
Abhishek Pictures, which bought the Nizam area rights for Rs 8.5 crores, is the only one who reported marginal profits.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil