»   »  வட இந்தியாவில் கபாலிக்கு பெரும் வரவேற்பு.. கலைப்புலி தாணு மகிழ்ச்சி!

வட இந்தியாவில் கபாலிக்கு பெரும் வரவேற்பு.. கலைப்புலி தாணு மகிழ்ச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வட இந்தியாவில் கபாலி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக படத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அங்கு படம் திரைக்கு வந்த முதல் நாளை விட இன்று 25 சதவீத அளவுக்கு வசூல் அதிகரித்துள்ளதாகவும் கலைப்புலி தாணு ஒன்இந்தியா- தமிழுக்கு தெரிவித்துள்ளார்.

உலகமெங்கும் கபாலி திரைக்கு வந்துள்ளது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும் கூட படத்திற்கு ரசிகர்களிடையே படத்திற்கு வரவேற்பு குறையவில்லை.

Kabali a big hit in North India, says Kalaipuli Thanu

வட இந்தியாவிலும் கபாலி திரையிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1200 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. அங்கும் ரசிகர்கள் கபாலியைப் பார்க்க அலை மோதுவதாக தகவல்கள் கூறுகின்றன.

முதல் நாள் வந்த கூட்டம் மற்றும் கூட்டத்தை விட தற்போது 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் கபாலி வட இந்தியாவிலும் ஹிட் ஆகியுள்ளதாக கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.

வட இந்தியாவில் கலைப்புலி தாணுவே படத்தை நேரடியாக ரிலீஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kabali producer Kalaipuli Thanu is happy after the super star Rajinikanth starrer movie is doing well and becomes a hit in North India too.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil