»   »  கபாலி வசூல் நிலவரம்.... மூன்றே நாளில் ரூ 200 கோடிகளைத் தாண்டி சாதனை!

கபாலி வசூல் நிலவரம்.... மூன்றே நாளில் ரூ 200 கோடிகளைத் தாண்டி சாதனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் மூன்றே நாட்களில் உலகெங்கும் ரூ 268 கோடிகளை முதல் மூன்று நாட்களில் வசூலித்துள்ளது.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தப் படத்தின் முதல் மூன்று நாட்களின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.


Kabali box office result

இதுவரை எந்த இந்தியப் படமும் வசூலிக்காத அளவுக்கு தமிழகம், இந்தியா மற்றும் உலக நாடுகளில் ரூ 268 கோடிகளை வசூலித்துள்ளது.


தமிழகத்தில் முதல் மூன்று நாட்களில் ரூ 54 கோடிகளை கபாலி குவித்துள்ளது.


கேரளாவில் ரூ 12 கோடிகளும், ஆந்திராவில் சாதனை வசூலாக ரூ 30 கோடிகளும் வசூலாகியுள்ளது.


இந்தி பேசும் வட மாநிலங்களில் கபாலியின் தமிழ், தெலுங்கு மற்றும் இந்திப் பதிப்புகள் இதுவரை மொத்தம் ரூ 25 கோடிகளுக்கு மேல் குவித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது.


வெளிநாடுகளில் வேறு எந்த இந்தியப் படமும் கற்பனை செய்ய முடியாத வசூல் கபாலிக்குக் கிடைத்துள்ளது. மொத்தம் ரூ 110 கோடிக்கு மேல் வெளிநாட்டு வசூல் உள்ளது.


முதல் மூன்று நாட்களில் மட்டும் கபாலியின் மொத்த வசூல் ரூ 268 கோடி என தெரியவந்துள்ளது.


இந்த வாரமும் இதே வசூல் தொடர்ந்தால் எளிதாக ரூ 400 கோடிக்கும் மேல் கபாலி வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

English summary
Official sources from Kollywood says that Kabali has collected Rs 268 cr worldwide in just 3 days.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil