»   »  'கபாலி கஃபே'... இது வேற லெவல் புரோமோஷன்!

'கபாலி கஃபே'... இது வேற லெவல் புரோமோஷன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோயமுத்தூர்: ரஜினியின் 'கபாலி'க்காக பல்வேறு நிறுவனங்களும் புரமோஷன் செய்து வருகின்றன. அந்த வரிசையில் கோயமுத்தூரில் உணவகம் ஒன்றும் களமிறங்கியுள்ளது.

ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் 'கபாலி' படத்திற்கு ஏர்ஏசியா, கேட்பரி, ஏர்டெல், முத்தூட் என பிரபல நிறுவனங்கள் விளம்பரத் தூதர்களாக செயல்பட்டு வருகின்றன.

சமூக வலைதளங்கள், இணையம் என்று எங்கு பார்த்தாலும் 'கபாலி' பற்றிய பேச்சாகவே இருக்கிறது.

ரஜினி ரசிகர்கள்

ரஜினி ரசிகர்கள்

கட்-அவுட், பேனர்களுடன் கோயில்களில் சிறப்புப் பூஜை மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குதல் போன்ற செயல்களை செய்திட, ரஜினி ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

வேஷ்டி சட்டை

வேஷ்டி சட்டை

இதுதவிர முதல்நாள் முதல் காட்சியை ஒரு குறிப்பிட்ட 'டிரெஸ் கோடு'டன் கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதற்காக சிவப்பு, ஊதா பார்டர்கள் வைத்த வேஷ்டிகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளதாக ரஜினி ரசிகர் மன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உணவகம்

உணவகம்

இந்நிலையில் கோயமுத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள 'கோலிவுட் கஃபே' என்ற உணவகம் முழுவதும் 'கபாலி' புரமோஷன்களால் நிரம்பி வழிகிறது. சுவர்களில் ரஜினியின் படங்கள், பஞ்ச் வசனங்கள் ஆகியவற்றைப் பதித்துள்ளனர். மேலும் உணவுக்காக காத்திருக்கும் நேரத்தில் விளையாட ரஜினி தொடர்பான குறுக்கெழுத்துப் புதிர்கள் மேஜை மேல் இருக்கின்றன.

சிறப்புப் பரிசு

சிறப்புப் பரிசு

ரஜினி தொடர்பான குறுக்கெழுத்துப் புதிர்களில் வெல்பவர்களுக்கு பரிசுகளையும் இந்த உணவகம் வழங்குகிறது. நுழைவாயிலில் 'கபாலி' கெட்டப்பில் இருக்கும் ரஜினி புகைப்படத்துடன் பொதுமக்கள் ஆர்வமாக செல்பி எடுத்துக் கொள்கின்றனர். இதுகுறித்து இந்த உணவகத்தை நடத்தி வரும் ஹரிஹரன் சுரேஷ் ''தான் ரஜினியின் தீவிர ரசிகர்'' என்பதால் இப்படி செய்ததாக தெரிவித்திருக்கிறார்.

வருகின்ற 22ம் தேதி 'கபாலி' உலகம் முழுவதும் வெளியாகிறது.

English summary
In Coimbatore Rajini's Diehard Fan Promote Kabali Movie in his Own Cafe.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil