»   »  இதுவா கபாலி கிளைமேக்ஸ்? ரசிகர்கள் ஏற்பார்களா?

இதுவா கபாலி கிளைமேக்ஸ்? ரசிகர்கள் ஏற்பார்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ளியன்று வெளியாக உள்ள 'கபாலி' திரைப்படம் குறித்து அதிகம் தெரியாத முக்கிய சில விஷயங்கள் கசிந்துள்ளன.

கபாலி திரைப்படம் முழுக்க ரஞ்சித்தின் படமாக வெளியாக உள்ளதாகவும், சூப்பர் ஸ்டார் என்ற இமேஜை தவிர்த்த ரஜினி படமாக இருக்கும் என்றும் தகவல்கள் கசிகின்றன.

மெட்ராஸ் படத்தை பார்த்து வியந்த ரஜினிகாந்த் தனது மகள் மூலம், புதிய படத்திற்கு கதை கேட்டுள்ளார். இதற்காக மலேசியா டான் குறித்த கதை, அறிவியல் சார்ந்த சயின்ஸ் புனைவு கதை என இரண்டு கதைகளை தயார் செய்துள்ளார் ரஞ்சித். அதில் ரஜினிகாந்த மலேசியா டான் குறித்த கதையை தேர்ந்தெடுத்துள்ளார். அதுதான் கபாலி.

மெல்ல நட, மெல்ல நட

மெல்ல நட, மெல்ல நட

சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்து கபாலி கதாப்பாத்திரத்தில் முரண்படாமல் சினிமா வருகிறதாம். ரஜினிக்கே உரிய துரித கதி நடையை கைவிட்டு படம் முழுக்க ரஜினி, மெதுவாக நடந்து வரும்படி ரஞ்சித் நடிக்க வைத்துள்ளார்.

ஸ்டைல்கள் இல்லை

ஸ்டைல்கள் இல்லை

தனக்கே உரிய பல ஸ்டைல்களை கபாலி படத்திற்காக மாற்றி அமைத்துள்ளார் ரஜினி என்கிறார்கள் படக் குழுவினர்.

மலாய் மொழி

மலாய் மொழி

மலேசிய தமிழ் மக்களுக்காக போராடும் டானின் கதை என்பதால்,இந்த படத்தின் பல இடங்களில் ரஜினிகாந்த் மலாய் மொழி பேசியுள்ளதாக கூறப்படுகிறது. அதுவும், சரளமாக பேசியுள்ளாராம்.

நெகட்டிவ் கிளைமேக்ஸ்

நெகட்டிவ் கிளைமேக்ஸ்

கபாலி படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில், கபாலி கதாப்பாத்திரம், இறக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி ரசிகர்கள் இதை ஏற்க மாட்டார்கள் என்றும், படத்தை சுபமாக முடிக்கும்படியும், தயாரிப்பாளர் தாணு மற்றும் ரஜினி மகள், சவுந்தர்யா, இயக்குநர் ரஞ்சித்தை வலியுறுத்தியுள்ளனர்.

மாற்ற கூடாது

மாற்ற கூடாது

இந்த தகவல் ரஜினி காதுக்கு சென்றதும், படத்தின் கதைக்கு அப்படிதான் முடிவு இருக்க வேண்டும் என்பதால் கிளைமேக்சை மாற்ற வேண்டாம். படத்தின் ஹைலைட்டே அந்த சீன்தான் என்று கூறிவிட்டாராம். எனவே ரஞ்சித் விரும்பியபடியே கிளைமேக்ஸ் அமைகிறதாம்.

ஹைலைட் சீன்

ஹைலைட் சீன்

ரமணா திரைப்படத்தில் விஜயகாந்த் கதாப்பாத்திரம் இறுதியில் இறப்பதுதான் படத்தின் ஹைலைட்டாக இருந்தது. அதேபோல கபாலி பல மடங்கு அதிகம் பேசப்படும் படமாக இருக்கும் என்று படக்குழு வட்டாரங்கள் கூறுகின்றன.

English summary
Kabali climax scenes leaked among journalists, fans can expect a anti climax.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil