»   »  70 ப்ளஸ் அரங்குகளில் 50 வது நாளைத் தாண்டி ஓடும் கபாலி!

70 ப்ளஸ் அரங்குகளில் 50 வது நாளைத் தாண்டி ஓடும் கபாலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்தின் மெகா ஹிட் திரைப்படமான கபாலி, இன்றோடு 50 நாளை நிறைவு செய்கிறது. தமிழகத்தில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட அரங்குகளில் கபாலி 50 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டுள்ளது.

பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடித்த கபாலி படம் கடந்த ஜூலை 22-ம் தேதி வெளியானது.


Kabali crossed 50 days in 70 screens

வெளியான முதல் நாளிலிருந்து வசூலில் இந்திய சினிமாவே அதிசயிக்கும்படி ஏராளமான சாதனைகளைப் படைத்த கபாலி, இன்று 50வது நாளைத் தாண்டுகிறது.


உலகெங்கும் 5000 அரங்குகளுக்கு மேல் வெளியானது கபாலி. ஒரே பகுதியில் நான்கைந்து அரங்குகளில் வெளியானது. தமிழகத்தைப் பொறுத்த வரை எங்கு பார்த்தாலும் கபாலி மயம். கிட்டத்தட்ட அனைத்து அரங்குகளிலுமே கபாலிதான் ஓடிக் கொண்டிருந்தது. மூன்றாவது வாரத்திலிருந்து கபாலி திரையரங்குகள் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்பட்டது.


கடந்த வாரம் வரை கிட்டத்தட்ட 100 அரங்குகளுக்குமேல் கபாலி ஓடிக் கொண்டிருந்தது. இந்த வாரம் அவற்றில் சில அரங்குகளில் புதிய படங்கள் வெளியாகியுள்ளன.


தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் இதுகுறித்துக் கேட்டபோது, கபாலி வசூலில் பல சாதனைகள் படைத்துள்ளது. 50 நாட்கள் கடந்தும் 60 சென்டர்களில் படம் ஓடிக் கொண்டுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்னும் கபாலி ஓடிக் கொண்டுள்ளது," என்றார்.

English summary
Rajinikanth's Kabali has crossed 50 days successfully in morethan 70 plus screens.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil